உங்களுக்கு பிடிக்காத இடத்திலிருக்கும் மச்சத்தை அகற்ற இந்த 3 டிப்ஸை பாலோ பண்ணுங்க!!
நமது சருமத்தில் காணப்படும் சிறு புள்ளிகளை தான் மச்சம் என்கின்றோம்.இந்தியாவில் பெரும்பாலானோருக்கு மச்சம் கருமை நிறத்தில் காணப்படுகிறது.ஆனால் மச்சம் கருப்பு நிறத்தில் மட்டுமல்ல பழுப்பு,நீலம்,சாம்பல்,மஞ்சள்,இளஞ்சிவப்பு உள்ளிட்ட நிறங்களிலும் இருக்கின்றது.சிறிய மற்றும் பெரும் புள்ளிகளாகவும் மச்சம் காணப்படுகிறது.
சிலருக்கு உதடு,கண்கள்,உதட்டிற்கு கீழ் மச்சம் இருந்தால் அவர்களின் அழகு இன்னும் கூடும்.ஆனால் அதுவே சில இடங்களில் அழகை கெடுக்கும் விதமாக இருக்கும்.உங்களை அழகை கெடுக்கும் விதமாக மேனியில் இருக்கின்ற மச்சத்தை மறைய வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றவும்.
*ஆளி விதை
ஒரு தேக்கரண்டி ஆளிவிதையை ஒரு இரவு நீரில் ஊறவைத்து மறுநாள் பேஸ்ட் போல் அரைத்து மச்சங்கள் மீது தடவினால் அவை மெல்ல மெல்ல மறைந்துவிடும்.ஆளி விதை பேஸ்ட்டில் சிறிது தேன் சேர்த்து குழைத்து மச்சத்தில் அப்ளை செய்தால் உரிய பலன் கிடைக்கும்.
*அன்னாசி பழம்
ஒரு கீற்று அன்னாசி பழத்தை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.பிறகு அதை மச்சத்தின் மீது அப்ளை செய்யவும்.இப்படி வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால் அழகை கெடுக்கும் மச்சம் மறைந்து விடும்.
*ஆப்பிள் சைடர் வினிகர்
20 மில்லி நீரில் 2 துளி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து மச்சம் உள்ள இடத்தில் அப்ளை செய்தால் அவை சில தினங்களில் மறைந்துவிடும்.
*பேக்கிங் சோடா
*விளக்கெண்ணெய்
ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெயில் சிறிது பேக்கிங் சோடா மிக்ஸ் செய்து மச்சத்தின் மீது அப்ளை செய்தால் அவை சில தினங்களில் மறைந்துவிடும்.