வாழ்க்கையில் வலிகளை கடந்து 100% ஹேப்பியாக இருக்க இந்த விஷயங்களை பாலோ பண்ணுங்கள்!!

Photo of author

By Rupa

வாழ்க்கையில் வலிகளை கடந்து 100% ஹேப்பியாக இருக்க இந்த விஷயங்களை பாலோ பண்ணுங்கள்!!

இன்பம்,துன்பம் கலந்து தான் வாழ்க்கை.கோடிகளில் புரளும் மனிதனோ தெருக் கோடியில் வாழும் மனிதனோ யாராக இருந்தாலும் வாழ்வில் ஒரு கட்டத்தில் வலி,ஏமாற்றம்,துக்கத்தை கடந்து வந்திருப்பவர்களாக தான் இருப்பார்கள்.

ஆனால் வாழ்க்கையை மகிழ்ச்சியை எடுத்து செல்ல தான் அனைவரும் விரும்புகின்றனர்.பணத்தை நோக்கி மட்டும் ஓடாமல் தங்களின் ஆரோக்கியத்தின் மீதும் அக்கறை செலுத்த வேண்டும்.

குடும்பத்தில் ஏதேனும் பிரச்சனை,கடன் பிரச்சனை,வேலையின்மை என்று பல காரணங்களால் நம் சந்தோஷம் பறிபோய்விடுகிறது.இவ்வாறு இழந்த சந்தோஷத்தை மீட்டுக் கொண்டு வர இதை தினமும் செய்து வாருங்கள்.

காலையில் 20 முதல் 30 நிமிடங்களுக்கு தியானம்,தங்களால் முடிந்த யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யலாம்.இதனால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும்.

வாழ்க்கையை அடுத்து என்ன செய்யலாம் என்ற சரியான திட்டமிடல் இருக்க வேண்டும்.தாங்கள் செய்ய வேண்டியதை ஒரு புத்தகத்தில் எழுதி வைக்கலாம்.அல்லது ஓவியம் போல் வரைந்து வைக்கலாம்.

தங்களுக்கு பிடித்த உணவு சாப்பிடுவது,பிடித்த உடைகள் அணிவது என்று தங்களுக்கான ஆசைகளை பார்த்து செய்திடுங்கள்.தினமும் 8 மணி நேர தூக்கத்தை அனுபவியுங்கள்.

மற்றவர்களை சார்ந்து இல்லாமல் தங்களுக்கான தேவைகளை தங்கள் உழைப்பில் பூர்த்தி செய்ய முயலுங்கள்.

பிறரின் சாடல்,வெறுப்புணர்வை பற்றி கவலை கொள்ளாமல் உங்கள் பலத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.வாழ்க்கையில் யாருக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.அவர்களின் சில செயல்கள் உங்களின் மகிழ்ச்சியை பறித்து விடும்.