உங்கள் வீட்டு பிரிட்ஜ் மின்சாரம் பிடிக்காமல் இருக்க.. இந்த ட்ரிக்ஸை பாலோ பண்ணுங்கள்!!

Photo of author

By Divya

உங்கள் வீட்டு பிரிட்ஜ் மின்சாரம் பிடிக்காமல் இருக்க.. இந்த ட்ரிக்ஸை பாலோ பண்ணுங்கள்!!

இன்று நமது இல்லங்களில் பொருட்களை பதப்படுத்துவதற்கு,துணிகளை துவைப்பதற்கு,சமையல் செய்வதற்கு,வீடு சுத்தம் செய்வதற்கு என்று அனைத்து செயல்களுக்கும் மின்சாதங்களை பயன்படுத்த தொடங்கி விட்டோம்.குறிப்பாக காய்கறிகள்,உணவுப் பொருட்களை பதப்படுத்த பிரிட்ஜ் பயன்படுத்துவது அதிகரித்த வண்ணம் உள்ளது.

வீட்டு உபயோகத்திற்கு 45 லிட்டர் முதல் 800 லிட்டர் வரையிலான பிரிட்ஜ் இருக்கின்றது.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கிள் டோர் பிரிட்ஜ் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது.ஆனால் இன்றோ டபுள் டோர்,ட்ரிபிள் டோர்,தனி தனி கதவுகள் கொண்ட பிரிட்ஜ் உள்ளது.எந்த பிரிட்ஜாக இருந்தாலும் அதை முறையாக பராமரித்தல் மட்டுமே பல ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியும்.

காய்கறிகள்,பொருட்கள் கெட்டுப்போகாமல் நீண்ட நாட்கள் வைத்து பயன்படுத்த பிரிட்ஜ் உதவுகிறது.என்ன தான் உபயோகமான பொருளாக இருந்தாலும் அதை முறையாக பராமரிக்க தவறினால் மின்சார கட்டணம் அதிகமாகும் என்பதை நினைவில் கொள்வது அவசியமாகும்.பிரிட்ஜின் மின்சார கட்டணம் குறைய இந்த ட்ரிக்ஸ் ட்ரை பண்ணுங்கள்.

1)பிரிட்ஜில் அதிகளவு பொருட்களை திணிப்பதை தவிர்க்க வேண்டும்.இப்படி அதிகளவு பொருட்களை வைப்பதினால் பிரிட்ஜ் அதிக மின்சாரம் இழுக்கும்.இதனால் மின்சார கட்டணம் அதிகமாகும்.

2)பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது.இப்படி செய்வதால் பிரிட்ஜில் உள்ள குளிர்ந்த காற்று வெளியேறிவிடும்.அது மட்டுமின்றி வெளியில் இருக்கின்ற வெப்பக் காற்று பிரிட்ஜினுள் சென்றுவிடும்.இதனால் அதிகளவு கரண்ட் செலவாகிறது.எனவே தங்களுக்கு தேவைப்படும் பொருட்களை ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்வது நல்லது.

அதேபோல் உங்கள் பிரிட்ஜின் ப்ரீஸரில் அதிகளவு ஐஸ்கட்டிகள் படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.பிரிட்ஜை திறந்தால் அதை மூடி விட்டீர்களா? என்று ஒருமுறை செக் செய்து கொள்வது நல்லது.உங்கள் பிரிட்ஜ் கதவு மூடபடவில்லை என்றால் அதிக மின்சாரம் இழுத்து கரண்ட் பில் அதிகமாகிவிடும்.

வாரம் ஒருமுறை பிரிட்ஜை சுத்தம் செய்ய வேண்டும்.பிரிட்ஜில் வைக்கும் பொருட்களை திறந்த நிலையில் வைக்க வேண்டும்.அழுகிய,வாடிய பொருட்களை பிரிட்ஜில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.