உங்கள் அசல் சொத்து ஆவணம் தொலைந்து விட்டால் இதனை ஃபாலோ பண்ணுங்கள்!! உடனே பெற்றுக் கொள்ளலாம்!!

Photo of author

By Rupa

உங்கள் அசல் சொத்து ஆவணம் தொலைந்து விட்டால் இதனை ஃபாலோ பண்ணுங்கள்!! உடனே பெற்றுக் கொள்ளலாம்!!

இந்த காலத்தில் உள்ள விலைவாசியின் வீடு கட்டுவது என்பது சிரமமான ஒன்றாக உள்ளது. அவர் நம் வீடு கட்ட முற்படும்பொழுது அல்லது அதனை விற்க நடவடிக்கை எடுக்கும் பொழுதும் தவறுதலாக நாம் பல இடங்களில் சொத்தின் அசல் ஆவணத்தை தொலைத்து விடுகிறோம்.

அதுமட்டுமின்றி எதிர்பாராத விபத்துகளாலும் அசல் ஆவணம் சேதமடைந்து விடுகிறது. பலருக்கும் இதனின் நகலை எப்படி பெறுவது என்பது தெரியாமலே உள்ளனர். மிகவும் எளிமையான மூன்று வழிகளில் இதனை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

முதலில் அசல் ஆவணம் தொலைந்து விட்டால் அவர்களின் வட்டார காவல்துறை அதிகாரியிடம் புகார் அளித்து எஃப் ஐ ஆர் பதிவு செய்ய வேண்டும்.

அவர்கள் எஃப் ஐ ஆர் பதிவு செய்யவில்லை என்றால் ஆன்லைனில் கூட பதிவு செய்யலாம். பின்பு போலீசார் இதனை தேட நடவடிக்கை எடுப்பர்.

அவ்வாறு தேடியும் கிடைக்கவில்லை என்றால் இரண்டாவது கட்டமாக இது குறித்து செய்தித்தாளில் விளம்பரம் அளிக்கப்படும். இவ்வாறு விளம்பரம் அளிக்கப்பட்டு 15 நாட்கள் காத்திருப்பது கட்டாயம்.

அச்சமயத்திலும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை என்றால் மூன்றாவதாக நீங்கள் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் நகல் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்.

அவ்வாறு விண்ணப்பிக்கும் பொழுது நீங்கள் கொடுத்த வழக்கின் மூலம் போடப்பட்ட எஃப் ஐ ஆர் மற்றும் செய்தித்தாள் விளம்பரம் உள்ளிட்டவையும் இணைக்க வேண்டும்.

மேற்கொண்டு இதற்கென ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொள்கிறார். இதனை தொடர்ந்து இருபது நாட்களில் நீங்கள் தொலைத்த சொத்து ஆவணத்தின் நகலை எளிமையாக பெற்றுக்கொள்ளலாம்.