பல முன்னணி நிறுவனங்களைத் தொடர்ந்து தற்போது டெல்! ஆட்குறைப்பு நடவடிக்கை ஊழியர்கள் அவதி!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.
மேலும் போக்குவரத்து சேவைகளும் அனைத்து இடங்களுக்கும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே பணிபுரிய அந்தந்த நிறுவனங்கள் ஏற்பாடு செய்தது.
அதைத் தொடர்ந்து தற்போது வரையிலும் ஒரு சில நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டில் இருந்தபடியே தான் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் உலகளாவிய பல்வேறு கார்ப்பரேட் மற்றும் நுகர்வோர் நிறுவனங்கள் பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் காரணமாக செலவுகளை குறைப்பதற்கு வீழ்ச்சியை சமாளிப்பதற்காகவும் ஆயிரக்கணக்கானவர்களை பணி நீக்கம் செய்து வருகின்றது.
முன்னதாகவே ட்விட்டர் அமேசான் போன்ற முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியது. இந்நிலையில் தற்போது டெல் நிறுவனமும் அதில் இணைந்து இருக்கின்றது. நெல் நிறுவனத்தில் பணிபுரியும் 6650 பேரை அந்த நிறுவனம் அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது.
இதற்கு டெல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஊழியர்களுக்கு மெமோ அனுப்பியுள்ளார். இதில் கூறியிருப்பது கொரோனாவுக்கு பின்னர் தனிநபரின் கணினிக்கான தேவை குறைந்துள்ளது.மேலும் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அது அதுமட்டுமின்றி தற்போதைய வர்த்தக சூழல் தான் எதிர்கால சந்தையை நிச்சயமாகின்றது என கூறியுள்ளார். அதனால் தான் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.