உணவு விநியோகிப்பாளர்கள் இதை பயன்படுத்த இனி தடை! எதிர்க்கும் மக்கள்!

Photo of author

By Rupa

உணவு விநியோகிப்பாளர்கள் இதை பயன்படுத்த இனி தடை! எதிர்க்கும் மக்கள்!

புது வருடங்கள் தொடங்கும் போது  ஒவ்வொரு ஆண்டிலும் டெக்னாலஜி வளர்ந்து கொண்டே போகிறது.அந்த வரிசையில் இருப்பது தான் விரும்பும் உணவை இருக்கும் இடத்திற்கே கொண்டு செல்வது.அதற்கென்று தனி நிறுவங்களே உண்டு.ஸ்விகி,சோமட்டோ போன்றவை ஆகும்.இந்த ஆப்களை பயன்படுத்தி நாம் விரும்பும் உணவை விரும்பிய கடையிலிருந்து வீட்டிற்கே கொண்டு வர இயலும்.கொண்டு வருவதற்கென்று தனி நபர்களை வைத்துள்ளனர்.அவர்கள் டெலிவரி பாய் என்றும் அழைக்கப்படுவர்.

அவ்வாறு உணவு கொண்டு வருபவர்களை பொதுவாக மக்கள் ஏளனமாகவே நினைகின்றனர்.சிலர் உணவை பெற்றுக்கொண்டு பணம் தராமல் தகராறு செய்வது வழக்கமாக கொண்டுள்ளனர்.அதுமட்டுமின்றி சிலர் அவர்களை பல மணி நரம் காக்க வைத்து அதன் பிறகு பணத்தை தருகின்றனர்.இவ்வாறு தொடர்ந்து நடந்த வண்ணமாகவே தான் உள்ளது.அவர்களை அவ்வாறு செய்ய கூடாது என்று பலர் விழிப்புணர்வு போன்ற வீடியோக்களை பதிவு செய்வது கொண்டும் வருகின்றனர்.தற்போது ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் பெரிய வணிகவளாகம் ஒன்று உள்ளது.அங்கு உணவு விநியோகிக்க வருபவர்கள் அந்த வணிக வளாகத்தில் உள்ள லிப்டை பயன்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளனர்.அதற்கு பதிலாக உணவு விநியோகம் செய்ய வருபவர்கள் அங்குள்ள படிக்கட்டுக்களை பயன்படுத்தும் படி ஆணையிட்டுள்ளனர்.

இதேபோல மற்றொரு உணவகமும் உணவு விநியோகிக்க வரும் ஸ்விகி மற்றும் சோமாடோ ஊழியர்கள் உணவகத்தில் இருக்கும் கழிவறையை பயன்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளனர்.அதனால் அந்த மாநில மக்கள் உணவு விநியோக்கிகும் பணியாளர்களுக்கு ஆதரவு குரலை எழுப்பியுள்ளனர்.நமக்கு பிடித்த உணவை குறித்த நேரத்தில் நாம் கூறும் இடத்திற்கு கொண்டு வந்து தருபவர்களை கீழனமாக எண்ணக் கூடாது.அனைவருக்கும் தர வேண்டிய மரியாதையை அவர்களுக்கும் தர வேண்டும் என அம்மாநில மக்கள் அந்த வணிகவளாகம் மற்றும் உணவகத்திற்கு எதிராக கூறி வருகின்றனர்.