செல்போனுக்காக நீர் தேக்கத்தையே காலி செய்த உணவுத்துறை ஆய்வாளர்! சர்ச்சையை ஏற்படுத்திய செயல்!!

0
265
#image_title
செல்போனுக்காக நீர் தேக்கத்தையே காலி செய்த உணவுத்துறை ஆய்வாளர்! சர்ச்சையை ஏற்படுத்திய செயல்!
செல்பி எடுக்கும் பொழுது நீர் தேக்கத்தில் விழுந்த விலை உயர்ந்த செல்போனை மீட்க நீர் தேக்கத்தை காலி செய்த உணவுத்துறை ஆய்வாளரின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் உள்ள கொய்லிபேடா பகுதியில் உணவுத்துறை ஆய்வாளராக ராஜேஷ் விஸ்வாஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மே 23ம் தேதி கேர்கட்டா எனும் நீர்தேக்கப் பகுதியை சுற்றி பார்க்க சென்ற போது நீர்தேக்கத்தின் அருகில் நின்று செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது செல்போன் நீர்தேக்கத்துக்குள் விழுந்தது.
சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட்போன் நீர்தேக்கத்துக்குள் விழுந்ததை அடுத்து பதறிய உணவுத்துறை ஆய்வாளர் ராஜேஷ் அங்கிருக்குப்பவர்களை அழைத்து செல்போனை மீட்கும்படி கேட்டுள்ளார். அவர்களும் முயற்சி செய்து பார்த்தும் முடியவில்லை. 15 அடி ஆழமுள்ள நீர்தேக்கத்தில் செல்போன் விழுந்ததால் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதற்கு மத்தியில் உணவுத்துறை ஆய்வாளர் ராஜேஷ் விஸ்வாஸ் அவர்கள் இரண்டு கனரக மோட்டார்களை வைத்தீ நீர்தேக்கத்தில் இருக்கும் தண்ணீரை வெளியேற்ற தொடங்கினார். 1 லட்சம் மதிப்பிலான செல் போனை மீட்பதற்கு தொடர்ந்து மூன்று நாட்கள் மோட்டார் மூலம் 21 லட்சம் லிட்டர் தண்ணீரை உணவுத்துறை ஆய்வாளர் ராஜேஷ் விஸ்வாஸ் வெளியேற்றியுள்ளார்.
இது தொடர்பாக நீர் மேலாண்மை அதிகாரிகளுக்கு தகவல் சொல்லப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நீர் மேலாண்மை அதிகாரிகள் நீர் தேக்கத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் ராஜேஷ் விஸ்வாஸை தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து கான்கேர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா சுக்லா அவர்கள் உணவுத்துறை ஆய்வாளர் ராஜேஷ் விஸ்வாஸ் அவர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். அரசு அதிகாரியாக இருக்கும் ராஜேஷ் விஸ்வாஸ் 1 லட்சம் மதிப்பிலான செல்போனை மீட்டெடுக்க 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வீணாக்கிய இந்த செயல் அந்த பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Previous articleசிகிச்சைக்காக கேரளா சென்ற விஷால்!! அவருக்கு உடலில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கா?
Next articleலியோவுடன் மோதும் கேப்டன் மில்லர்! அதிகாரப்பூர்வமாக சொன்ன தயாரிப்பாளர்!!