செல்போனை மீட்க அணையை காலி செய்த உணவுத்துறை ஆய்வாளர்! 53000 அபராதம் விதிக்கப்பட்டது!
கடந்த வாரம் விலை உயர்ந்த செல்போனை மீட்பதற்காக அணையில் இருந்த தண்ணீரை வெளியேற்றிய உணவுத்துறை ஆய்வாளர் ராஜேஸ் விஸ்வாஸ் அவர்களுக்கு 53000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் அணைக்கட்டில் தவறி விழுந்த ஒரு லட்சம் மதிப்பிலான செல்போனை மீட்பதற்காக உணவுத் துறை ஆய்வாளர் ராஜேஷ் விஸ்வாஸ் அவர்கள் இரண்டு கனரக மோட்டார்களை வைத்து அணைக்கட்டில் இருக்கும் தண்ணீரை வெளியேற்ற தொடங்கி அணைக்கட்டில் இருக்கும் நீரை வெளியேற்றினார்.
இந்த சம்பவத்தை அறிந்த மாவட்ட கலெக்டர் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து உணவுத்துறை ஆய்வாளர் ராஜேஷ் விஸ்வாஸை தடுத்து நிறுத்தினார். மேலும் உணவுத்துறை ஆய்வாளர் ராஜேஷ் விஸ்வாஸை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் அவருக்கு வாய்மொழியாக அனுமதி அளித்த அதிகாரிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதையடுத்து சத்தீஷ்கர் நீர்வளத்துறை சார்பில் உணவுத்துறை ஆய்வாளர் ராஜேஷ் விஸ்வாஸ் அவர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில் உரிய அனுமதி பெறாமல் டீசலீ மோட்டார்களை வைத்து தண்ணீரை வெளியேற்றியது சட்டப்படி குற்றம் ஆகும். 4104 கன அடி நீரை நீங்கள் வீணாக்கியுள்ளீர்கள். இது சட்ட விரோத செயலாகும். அதற்காக ஒரு கன அடிக்கு ரூ 10.50 வீதம் 4104 கன அடி நீருக்கு மொத்தமாக 43092 ரூபாய் அபரதாம் செலுத்த வேண்டும். அத்துடன் அனுமதி இல்லாமல் நீரை வெளியேற்றியதற்காக 10000 ரூபாய் அபராதம் என மொத்தமாக 53092 ரூபாயை அபராதமாக செலுத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் உணவுத்துறை செயலர் ராஜேஷ் விஸ்வாஸ் அவர்கள் மூன்று நாட்களாக தண்ணீரை வெளியேற்றியதாகவும் 21 லட்சம் லிட்டர் தண்ணீர் அதன் மூலம் வீணடிக்கப்பட்டதாகவும் தகவல் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.