நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடிய உணவு வகைகள்!! எப்படி, எத்தனை நாட்கள் உண்பது!!

Photo of author

By Selvarani

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடிய உணவு வகைகள்!! எப்படி, எத்தனை நாட்கள் உண்பது!!

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடிய உணவுகளை தனித்தனியாக பிரித்துப் பார்க்கலாம். திரவப் பொருட்கள், மூலிகைகள், காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் இவற்றை பிரித்து பார்க்கலாம். இதில் இருக்கும் பொருட்களை வாரத்தில் இரண்டு நாட்கள் இதையெல்லாம் சாப்பிட்டு வருகிறோம் என்பதை பற்றியும் பார்க்கலாம்.

திரவ வடிவிலான உணவுகள்:

1. மோர்
2. இளநீர்
3. பசும்பால்
4. தேங்காய் பால்
5. கீரை சூப்
6. தண்ணீர்

மோர், பசும்பால் வாங்கி வீட்டிலேயே தயிர் செய்து அதனை மோராக மாற்றி கொடுப்பது நல்லது. தினமும் மதிய நேரங்களில் மோர் எடுத்துக் கொள்வது மூலம் உடல் ஆரோக்கியம் பெற்று நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.
அடுத்ததாக நமக்கு எப்போதெல்லாம் இளநீர் கிடைக்கிறதோ அப்பொழுது அதனை அருந்துவதன் மூலம் ஆரோக்கியம் பெறலாம், தினமும் பசும்பால் சாப்பிடுவதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். தேங்காய் பால் எடுத்து அதனுடன் வெல்லம் சேர்த்து அருந்துவது உடல் ஆரோக்கியத்தை தரும். இதனை வாரம் 2-3 நாட்களுக்கு எடுத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் குறைந்தது ஒரு நாட்களாவது எடுத்துக் கொள்வது நல்லது.
வாரத்தின் ஒரு நாளாவது சூப் செய்யக்கூடிய ஏதேனும் ஒரு கீரையில் சூப் செய்து குடிப்பது நல்லது. முக்கியமாக தண்ணீர் ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு அவரவர் உடலுக்கு ஏற்றபடி கட்டாயம் குடித்து வருவது மிகவும் நல்லது.

பல வடிவிலான உணவுகள்:

1. எலுமிச்சை
2. ஆரஞ்சு
3. கொய்யா
4. பப்பாளி
5. அண்ணாச்சி பழம்
6. சாத்துக்குடி
7. மாம்பழம்
8. நாவல் பழம்

இந்த பழ வகைகளை வாரத்தில் இரண்டு நாட்கள் கட்டாயம் சாப்பிடுவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக்கக்கூடிய சத்துக்களை கொடுக்கும்.

மூலிகை வகை உணவுகள்:

1. துளசி
2. கற்பூரவள்ளி
3. வேப்பிலை
4. வெற்றிலை
5. தூதுவளை
6. முடக்கத்தான் கீரை
7. முருங்கைக்கீரை

இதில் ஏதேனும் இரண்டு வகையான மூலிகைகளை வாரத்தில் இரண்டு நாட்களுக்கு எடுத்து வருவதை உடல் ஆரோக்கியம் பெற்று நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

காய்கறி வகை உணவுகள்:

1. பீட்ரூட்
2. கேரட்
3. மஞ்சள்
4. பூண்டு
5. இஞ்சி
6. சின்ன வெங்காயம்
7. குடைமிளகாய்
8. முட்டைக்கோஸ்
9. கத்திரிக்காய்
10. மஞ்சள் பூசணி
11. நெல்லிக்காய

இந்த உணவுகளை வாரத்தில் இரண்டு நாள் சாப்பிட்டு வருகிறீர்களா என்பதை பார்த்து, இது எல்லாமே உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய உணவு வகைகள். இதனை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது. முடிந்தவரை தினமும் நெல்லிக்காய் ஒன்று சாப்பிட்டு வருவது உடல் ஆரோக்கியத்தை உண்டாக்கும்.