மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத உணவு வகைகள்!!! அவ்வாறு செய்தால் இத்தனை பாதிப்புகள் ஏற்படுமா!!!
இன்றைய காலத்தில் பல வகையான உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டு வருகிறோம். அவ்வாறு மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் பொழுது நமது உடலுக்கு என்னென்ன பாதிப்புகள் வரும் என்பது நமக்கு தெரியவில்லை. இந்த பதிவில் எந்தெந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது, அவ்வாறு செய்தால் என்ன பாதிப்புகள் வரும் என்று தெரிந்து கொள்ளலாம்.
நாம் பொதுவாக காலையில் செய்த உணவில் மீதம் இருக்கும் உணவை மதியம் சூடு செய்து மதிய உணவுடன் சேர்த்து சாப்பிடுவோம். இதனால் மதிய உணவில் மீதம் ஏற்படும். மதியம் மீதமாகும் உணவை இரவிலும் இரவில் மீதம் ஆகும் உணவை மறுநாள் காலையிலும் சூடு செய்து சாப்பிடுவோம்.
இதுதான் இன்றைய நாளில் பெரும்பாலான மக்கள் செய்து வருகின்றனர். அவ்வாறு செய்யும் பொழுது பல பாதிப்புகள் நமது உடலுக்கு ஏற்படுவது தெரிவது இல்லை. விழிப்புணர்வு என்பது குறைவாக கூட இல்லாமல் நாம் இன்றைய காலகட்டத்தில் இருக்கின்றோம்.
பொதுவாக ஞாயிற்றுக் கிழமைகளில் அனைவருடைய வீடுகளிலும் இறைச்சி என்பது இருக்கும். அதிலும் முக்கியமாக கோழி இறைச்சிதான் அதிக வீடுகளில் சமைக்கப்படும். இந்த கோழி இறைச்சி உணவு மறுநாள் மறுநாள் என்று பிரிட்ஜில் வைத்து சூடு செய்து சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் நபர்கள் இருக்கின்றனர். இதனால் பல பாதிப்புகளும் தீர்க்க முடியாத நோய்களும் ஏற்படும். அவ்வாறு நமது உடலுக்கு தீமைகளை ஏற்படுத்தக் கூடிய மீண்டும் சாப்பிடக் கூடாத உணவு வகைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மீண்டும் சூடு செய்து சாப்பிடக் கூடாத உணவு வகைகள்…
* நாம் வெள்ளை சாதத்தை மீண்டும் சூடு செய்து சாப்பிடக்கூடாது. அவ்வாறு சாதத்தை மீண்டும் சூடு செய்யும் பொழுது அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் பேய்விடும்.
* நாம் சமையலுக்கு அதாவது வற்றல், வடகம், போன்று பொறித்தலுக்கு பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.
* உருளைக் கிழங்குகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது. உருளைக் கிழங்கை மீண்டும் சூடுபடுத்தும் பொழுது க்ளோஸ்ட்ரியிடியம் போட்டுலினியம் என்ற நஞ்சு உருவாகும். இது நம் உடலுக்கு ஒவ்வாமை நோயை ஏற்படுத்துகின்றது.
* நாம் கோழி இறைச்சியை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் பொழுது நமக்கு செரிமான பிரச்சனை ஏற்படுகின்றது.
* முட்டையை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது. ஏன் என்றால் முட்டையை மீண்டும் சூடு செய்யும் பொழுது அதில் நைட்ரஜன் உருவாகும். இது நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
* காளானை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது. காளானை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் பொழுது நமக்கு வயிறு சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றது.
* பீட்ரூட்டை சூடு செய்து சாப்பிடக்கூடாது. பீட்ரூட்டை மீண்டும் சூடு செய்யும் பொழுது அதில் நைட்ரிக் ஆக்சைடு உருவாகின்றது. இது நமக்கு புற்று நோயை உண்டாக்கக் கூடும்.
* நாம் காலையில் வைத்த டீ அல்லது காபியை மீண்டும் சூடு செய்து சாப்பிடுவோம். அவ்வாறு டீ, காபியை சூடு செய்து சாப்பிடும் பொழுது நமக்கு வயிற்றுப் போக்கை ஏற்படுத்தி விடும்.