வெறும் வயிற்றில் இதை சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து.. மக்களே உஷார்!!

0
188
Health Tips in Tamil
#image_title

Health Tips in Tamil: இன்றைய நவீன காலத்தில் நாம் அனைவரும் ஏதோ ஒன்றை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம். அதனால் காலை உணவு என்பது பலர் போர் ஞாயிற்றுக்கிழமை மட்டுதான் சாப்பிடுகிறார்கள். ஒரு சிலர் காலை உணவை தவிர்ப்பதும், மேலும் ஒரு சிலர் காலை உணவிற்கு பதிலாக மற்ற உணவுப்பொருட்களை சாப்பிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்கள். ஆனால் அவ்வாறு சாப்பிடும் உணவானது நமது உடலுக்கு எவ்வித விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பலரும் அறிந்திடாத செயலாக இருக்கும்.

ஏனெனில் ஏதோ பசிக்காக சாப்பிட்டு விட்டால் போதும் என நினைத்துக் கொண்டு இவற்றையெல்லாம் சாப்பிட்டால் என்ன பிரச்சனைகள் வரப்போகிறது என நினைத்து அவசர அவசரமாக ஏதோ ஒன்றை வெறும் வயிற்றில் சாப்பிட்டு விட்டு அவர்கள் வேலைக்காக செல்வார்கள்.

ஆனால் பிற்காலத்தில் இது அவர்களுக்கு உடலில் பெரும் பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும். எனவே இந்த பதிவில் நாம் வெறும் வயிற்றில் எந்த உணவுகளை சாப்பிடலாம். எந்த உணவை சாப்பிடக்கூடாது என்று (verum vayitril sapida koodatha food in tamil) பார்க்கலாம்.

வெறும் வயிற்றில் தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள்..

காலை எழுந்ததும் பெரும்பாலான மக்கள் முதலில் குடிப்பது காபி தான். ஆனால் இந்த காபியை வெறும் வயிற்றில் குடிப்பதால் இது உடலை சூடேற்றுகிறது. காலம் காலமாக இதை அனைவரும் தான் குடிக்கிறார்கள் என நினைத்து நாம் குடித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இது ஒருவரின் உடலுக்கு பல தீமைகளை செய்கிறது. காபியில் அமிலத்தன்மை அதிகமாக இருப்பதால் இது நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணத்தை உருவாக்குகிறது.

காபி மட்டும் இல்லாமல் தேநீர் அதாவது டீ வெறும் வயிற்றில் குடிப்பதால் செரிமானத்திற்கு தேவையான பித்தத்தை அதிக அளவில் சுரக்க செய்கிறது. ஏனெனில் அதிக அளவு பித்தம் நமது உடலில் சேர்ந்தால் நமக்கு பித்தம் அதிகமாகிவிடும். எனவே உணவு சாப்பிட்டு சிறிது நேரம் கழித்து டீ காபி போன்றவற்றை உட்கொள்ளலாம்.

வாழைப்பழம்

அனைவரும் வேலையின் காரணமாக அவசரமாக ஏதோ ஒரு பழத்தை சாப்பிட்டு விட்டு செல்வார்கள். அந்த வகையில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் வாழைப்பழம் 25 சதவீத சர்க்கரை உள்ளது. எனவே வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. இதில் அதிக அளவு மெக்னீஷியம் மற்றும் பொட்டாசியம் இருப்பதால் வெறும் வயிற்றில் சாப்பிடும் பொழுது இதய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இதனுடைய அமிலத்தன்மை காரணமாக வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள் என்பது புளிப்பு தன்மை கொண்ட பழங்களாகும். எனவே காலையில் ஆரஞ்சு, எலுமிச்சை பழம் போன்ற பழங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக ஒரு சிலர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை பழம் பிழிந்து காலை வெறும் வயிற்றில் குடித்து வருவார்கள். எலுமிச்சை பழத்தில் சிட்ரிக் அமிலம் உள்ளதால் வெறும் வயிற்றில் குடிக்கும் பொழுது அது உங்கள் உடலை நேரடியாக பாதிக்கிறது. மேலும் சிட்ரஸ் பழங்களில் பிரக்டோஸின் அளவு அதிகமாக இருப்பதால் இது வளர்ச்சி மாற்றத்தை உண்டு செய்யலாம். எனவே காலை வெறும் வயிற்றில் புளிப்புத்தன்மை கொண்ட பழங்களை உட்கொள்ளக்கூடாது.

மேலும் வெறும் வயிற்றில் தயிர், மோர், வினிகர், பூண்டு, தக்காளி போன்ற பழங்களை நிச்சயம் சாப்பிடக்கூடாது. இது வயிற்றின் இரைப்பையை நேரடியாக சென்று பாதிக்கும். மேலும் இவ்வகை உணவில் உள்ள அமிலங்கள் வெறும் வயிற்றில் இருக்கும் பொழுது இரைப்பையில் புண்களை ஏற்படுத்தும்.

மேலும் ஒரு சிலர் பச்சை காய்கறிகளை வெறும் வயிற்றில் சாப்பிடலாம் என சாப்பிடுவார்கள். ஆனால் பச்சை காய்கறிகளில் அமினோ அமிலங்கள் அதிகப்படியாக இருப்பதால் அவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடும் பொழுது வாயு தொல்லை வயிற்று வலி போன்றவை ஏற்படலாம்.

மேலும் படிக்க: அரிசி சாப்பிடும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்போ உங்க தலையில முடி இருக்காதே..!!