மதிய நேரத்தில் நாம் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!! என்ன இதையும் சாப்பிடக் கூடாதா!!?

0
69
#image_title

மதிய நேரத்தில் நாம் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!! என்ன இதையும் சாப்பிடக் கூடாதா!!?

நாம் மதிய நேரத்தில் என்னென்ன உணவுகளை கட்டாயமாக சாப்பிடக் கூடாது என்பது பற்றியும் மீறி மதியம் சாப்பிடும் பொழுது என்ன நடக்கும் என்பது பற்றியும் இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

உணவே மருந்து என்று நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி நம்மை வளர்த்தார்கள். நாம் மருந்துதான் உணவு என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதற்கு காரணம் வளர்ந்து வரும் நாகரிகம் மற்றும் கலாச்சாரம் ஆகும். தற்பொழுது ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப நம்மை நாம் மாற்றிக் கொண்டு வருகிறோம்.

அதே போல உணவையும் வளர்ந்து வரும் காலத்திற்கு ஏற்ப மாற்றிக் கொண்டு வருவதால் நமக்கு நோய்களும் இந்த உணவுகளுடன் சேர்ந்து வருகின்றது. குறிப்பாக நாம் மூன்று வேலைகளிலும் முறையான உணவுகளை சாப்பிட வேண்டும். ஆனால் அப்படி நாம் நடப்பது கிடையாது.

காலையில் சாப்பிட வேண்டிய உணவுகளை மதியமும், இரவு சாப்பிட வேண்டிய உணவுகளை மதியும், மதியம் சாப்பிட வேண்டிய உணவு வகைகளை இரவு நேரத்திலும் சாப்பிடுகிறோம். இதனால் பல பாதிப்புகள் நம் உடலுக்கு ஏற்படுகின்றது.

நம்மில் பெரும்பாலானோருக்கு காலை மற்றும் இரவை விட மதிய நேரம்தான் அதிகம் பசி எடுக்கும். அந்த சமயம் நாம் கிடைக்கும் உணவுகள் அனைத்தையும் சாப்பிட்டால் உடலுக்கு கேடு விளைவிக்கும். இதனால் சில உணவுகளை மதிய நேரம் நாம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

மதியம் நாம் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்!!!

* சூப் வகைகள்
* சாலட்
* பர்கர்
* நூடுல்ஸ்
* சான்விட்ச்

சூப் வகைகள் :

பொதுவாக சூப் குடித்த பிறகு நமக்கு இருக்கும் பசி உணர்வு அதிகரிக்கும். மேலும் மதியம் சூப் வகைகள் குடிக்கும் பொழுது நமக்கு ஏற்கனவே உள்ள பசி உணர்வை மேலும் அதிகரிக்கும். இதனால் மதியம் நமக்கு அதிக உணவுகள் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். இதனால் உடல் எடை அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது.

* சாலட்

சாலட்டில் மிகக் குறைவான கலோரிகள் இருப்பதால் இது காலை நேரத்திற்கான உணவு வகையாக பார்க்கப்படுகின்றது. அதுவே இதை மதிய நேரத்திற்கான உணவாக பார்க்க இயலாது. நமக்கு அதிக பசி இருக்கும் பொழுது சாலட் சாப்பிட்டால் நம் பசி உணர்வு ஒன்றும் அடங்கி விடாது.

* பர்கர்

தற்பொழுதைய காலத்தில் பர்கர் போன்ற உணவு வகைகளை மக்கள் அதிகளவில் வாங்கி உண்கிறார்கள். ஆனால் இதனால் தான் பல பாதிப்புகள் ஏற்படுகின்றது. பர்கர் மட்டுமில்லாமல் பீட்சா முதலான உணவுகளை மதிய நேரத்தில் சாப்பிடும் பொழுது நமது உடலுக்கு இரும்புச்சத்து சத்துகள் மட்டும் தான் கிடைக்கின்றது. இதனால் நம் உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கின்றது. மேலும் உடல் பருமன், இதய நோய் போன்றவற்றை ஏற்படுத்தக் கூடும்.

* நூடுல்ஸ்

நூடுல்ஸ் உணவை நாம் மதிய நேரத்தில் சாப்பிடக் கூடாது. ஏனென்றால் இந்த நூடுல்ஸ் உணவை நாம் மதிய நேரத்தில் சாப்பிடும் பொழுது நம் உடலுக்கு பல ஆபத்துக்களை ஏற்படுத்துகின்றது. இதில் அதிகளவு கார்பஸ் இருக்கின்றது. இது உடல் நலத்தை பாதிக்கும். மேலும் உடல் எடையை அதிகரித்து விடுகின்றது.

* சான்விட்ச்

எப்பொழுதும் பிரெட் வகையிலான உணவுகளை மதிய நேரத்தில் சாப்பிடக் கூடாது. ஏனென்றால் நூடுல்ஸ் உணவில் உள்ள கார்பஸ் இதிலும் அதிகளவில் இருக்கின்றது. இதனால் நமக்கு செரிமானக் கோளாறு ஏற்படக்கூடும்.

Previous articleடெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த தனியார் பள்ளி, தொழிற்சாலை!!! 60000 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்த நகராட்சி ஆணையர்!!!
Next articleவிந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் சாமை!!! இதில் ஊத்தப்பம் செய்வது எப்படி!!!