மீண்டு வருவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்த மிகப்பெரிய வீராங்கனை மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த சோகம்! வாட்சப் ஸ்டேட்டஸால் கலங்கிப் போன நண்பர்கள்!

Photo of author

By Sakthi

சென்னை வியாசர்பாடியை சார்ந்தவர் 17 வயதான மாணவி பிரியா கால்பந்து விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்ட இவர், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று கொண்டு பல சாதனைகளை படைத்திருக்கிறார். சென்னை ராணி மேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த பிரியா அங்கே கால்பந்து விளையாட்டில் பயிற்சியும் பெற்று வந்தார் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் பயிற்சியின் போது இவருக்கு காலில் தசை பிடிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டதாக தெரிகிறது.

ஆனால் பிரியாவுக்கு காலில் வலி குறையாத காரணத்தால் மேல் சிகிச்சைக்காக மீண்டும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையை சார்ந்த மருத்துவர்கள் மாணவியை பரிசோதித்தனர் அப்போது காலில் தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில் இருப்பதால் காலை அகற்ற வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

உயிரை காப்பாற்ற வேறு வழியில்லாமல் வேதனையுடன் கால்பந்து வீராங்கனை யின் கால்களை அகற்ற சம்மதித்திருக்கிறார்கள் குடும்பத்தினர். இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சையின் மூலமாக கால்கள் அகற்றப்பட்டதாக தெரிகிறது.

தொடர்ச்சியாக அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தும் திடீரென்று எதிர்பாராத விதமாக இன்று அவர் உடல் நிலையில், பின்னடைவு ஏற்பட்டு சிறுநீரகம், ஈரல் மற்றும் இதயம் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் முன்னேற்றம் உண்டாகாமல் பரிதாபமாக உயிரிழந்தார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தான் மாணவி பிரியா உயிரிழப்பதற்கு முதல் நாள் வைத்திருந்த whatsapp ஸ்டேட்டஸ் இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அதில் அனைத்து நண்பர்கள் உறவினர்களுக்கும் நான் சீக்கிரமாகவே ரெடியாகி மீண்டு வருவேன்.

அதனால் யாரும் கோவிலில் படாதீர்கள். மாஸா வருவேன் எனது விளையாட்டு என்னை விட்டு எப்போதும் போகாது. நீங்கள் நான் வருவேன்னு நம்பிக்கையோடு காத்திருங்கள் என அத்தனை நம்பிக்கையாக பதிவிட்டு இருக்கிறார் பிரியா.

இதனைப் பார்த்த எல்லோரும் மருத்துவர்களின் சிறிய அலட்சியம் காரணமாக ஒரு மிகப்பெரிய வீராங்கனை என் கனவு சிதைந்து விட்டதாக வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.

அத்துடன் இதற்கு பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல எதிர்க் கட்சியினர் கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார்கள். அண்ணாமலை திமுகவை திறனற்ற அரசு என்றும் விமர்சனம் செய்து இருக்கிறார்.

இதற்கு நடுவே உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் தமிழக அரசின் சார்பாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.