உலகில் அமைதி ஏற்பட அனைவரும் ஒன்றிணைந்து கூட்டு முயற்சியில் ஈடுபட வேண்டும்! இது காலத்தின் கட்டாயம் பிரதமர் நரேந்திர மோடி!

0
208

இந்தோனேசியாவின் பாலி நகரில் உள்ள நூசா துவா பகுதியில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு இன்றும்,நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், சீன அதிபர் ஜின் பிங்க், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் போன்றோர் பங்கேற்றுள்ள நிலையில், இந்த மாநாட்டில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது உக்ரைனில் அமைதி திரும்ப போர் நிறுத்தமும், ராஜாங்கரீதியான பேச்சு வார்த்தையும் தான் முக்கியம். இந்த உலகம் முழுவதும் ஒன்றிணைந்து அதற்கான வழியை அமைக்க வேண்டும். இதனை நான் மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வருகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

கடந்த நூற்றாண்டில் இரண்டாம் உலகப் போர் உலகத்தில் பேரழிவை உண்டாக்கியது அதன் பிறகு அந்த கால தலைவர்கள் அமைதியின் பாதையில் செல்ல தீவிர முயற்சியை மேற்கொண்டனர் தற்போது நமக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது நோய் தொற்று காலத்திற்குப் பிறகு புதிய உலகை ஏற்படுத்தும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.

உலகில் அமைதி நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கூட்டு முயற்சியை முன்னெடுக்க வேண்டியது தற்போதைய காலத்தின் கட்டாயமாகும் உக்கரைனில் அமைதி திரும்புவதற்கான வழியை நாம் உண்டாக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

அடுத்த வருடம் புத்தரும், மகாத்மா காந்தியும் பிறந்த புண்ணிய பூமியில் நாம் எல்லோரும் ஜி-20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் ஒன்றிணையும்போது நாம் உலகிற்கு அமைதிக்கான தகவலை இன்னும் அழுத்தமாக தெரிவிப்போம். இதற்கு எல்லா தலைவர்களும் ஒப்புதல் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

உலகின் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் அத்யாவசிய பொருட்கள் மற்றும் அத்யாவசிய பொருட்களின் நெருக்கடி திகழ்ந்து வருகிறது. எல்லா நாடுகளிலும் ஏழை மக்கள் கடுமையான சவால்களை சந்தித்து வருகிறார்கள். தினசரி வாழ்க்கை நடத்துவது ஏழை மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. இரட்டை நெருக்கடியை சமாளிக்க அவர்களிடம் நிதி வசதி இல்லை.

அதனை அவர்களால் திரட்டவும் முடியவில்லை இந்த பிரச்சனைகளில் ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட அமைப்புகள் தோல்வியடைந்து விட்டனர் என்பதை நாம் எல்லோரும் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

அவர்களுக்கு ஏற்றவாறு சீர்திருத்தங்களை செய்ய நாம் எல்லோரும் தவறி விட்டோம். இன்று உலகம் ஜி 20 அமைப்பிலிருந்து அதிக எதிர்பார்ப்புகளை கொண்டிருக்கிறது. அதோடு இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி இருக்கிறது.

நோய் தொற்றுக் காலத்தில் 130 கோடி மக்களுக்கு உணவு கிடைப்பதை இந்தியா உறுதி செய்திருக்கிறது. அதே சமயத்தில் தேவைப்பட்ட பல நாடுகளுக்கு உணவு தானியங்களையும் இந்தியா ஏற்றுமதி செய்திருக்கிறது. உணவு பாதுகாப்பின் அடிப்படையில் உரத்திற்கு ஏற்பட்ட தட்டுப்பாடு மிகப்பெரிய பிரச்சனை.

இந்த உரத்தட்டுப்பாடு என்பது நாளைய உணவுக்கான பிரச்சனை அதற்கு உலக நாடுகளிடம் எந்த தீர்வும் இல்லை. உரம் மற்றும் உணவு தானியங்கள் ஆகிய இரண்டின் விநியோக சங்கிலியை நிலையானதாகவும், உறுதியானதாகவும் பராமரிக்க ஜி 20 அமைப்பு நாடுகள் பரஸ்பர ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நிலையான உணவு பாதுகாப்பை ஏற்படுத்த இயற்கை விவசாயம் திணை உள்ளிட்ட சத்தான மற்றும் பாரம்பரிய உணவு தானியங்களை ஊக்கப்படுத்துகிறோம். தினைப் பொருட்கள் உலகளாவிய ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பசியை தீர்க்கும் அடுத்த வருடம் நாம் எல்லோரும் சர்வதேச திணை ஆண்டை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும். சர்வதேச வளர்ச்சிக்கு இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மிகவும் முக்கியம்.

உலகத்தில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா மாறி இருக்கிறது எரிசக்தி விநியோகத்திற்கான கட்டுப்பாடுகளை யாரும் ஊக்குவிக்க கூடாது எரிசக்தி சுற்று சூழலுக்கு இந்தியா உறுதி கொண்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மின்சார சேவையில் பாதி அளவானது சுத்தமான எரிசக்தியிலிருந்து உற்பத்தி செய்யப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் .

ஜி-20 மாநாடுகளின் உச்சி மாநாட்டிற்கு இந்தியா தலைமை ஏற்கும் சமயத்தில் இந்த பிரச்சனைகளுக்கு சர்வேஸ் அளவில் ஒருமித்த தீர்வு ஏற்படுத்த செயல்படுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Previous articleமீண்டு வருவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்த மிகப்பெரிய வீராங்கனை மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த சோகம்! வாட்சப் ஸ்டேட்டஸால் கலங்கிப் போன நண்பர்கள்!
Next articleகால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்தது இப்படித்தான்! அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்த பரபரப்பு தகவல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here