#FIFAWorldCup உலககோப்பை கால்பந்து : இன்றிலிருந்து தொடங்குகிறது கால்பந்து காய்ச்சல்.. தோகாவில் பிரமாண்ட தொடக்க நிகழ்ச்சி..!

Photo of author

By Janani

உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று இரவு கத்தாரில் தொடங்கவுள்ளது.

உலகமெங்கிலும் மிகப்பெரிய விளையாட்டு போட்டுகளில் ஒன்று உலககோப்பை கால்பந்து போட்டி.23ம் வது உலககோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் இன்று தொடங்குகிறது.இந்த போட்டியில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. இன்று தொடங்கும் போட்டிகள் டிசம்பர் 18ம் தேதி வரை 29 நாள்கள் வரை போட்டிகள் நடைபெறும்.

32 நாடுகளும் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம் பெற்றுள்ளன. A பிரிவில் கத்தார், ஈக்வடார், செனகல், நெதர்லாந்து, B பிரிவில் இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ், C பிரிவில் அர்ஜென்டினா, சவுதி அரேபியா, மெக்சிகோ, போலந்து, D பிரிவில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா, E பிரிவில் ஸ்பெயின், கோஸ்டாரிகா, ஜெர்மனி, ஜப்பான், F பிரிவில் பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா, G பிரிவில் பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன், H பிரிவில் போர்ச்சுக்கல், கானா, உருகுவே, தென் கொரியா பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியும் அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும்.டிசம்பர் 2ம் தேதியும் லீக்போட்டிகள் முடிந்து புள்ளிகள் அடிப்படையில், இரண்டாம் சுற்றுக்கு அணிகள் முன்னேறும். அதனை தொடர்ந்து டிசம்பர் 9,10ல் கால் இறுதி போட்டியும்,13, 14ம் தேதிகளில் அரை இறுதி ஆட்டமும் நடைபெறும்.

இதனை தொடர்ந்து 18ம் தேதி இறுதி போட்டி தொடங்குகிறது. இந்நிலையில், இன்று இந்திட நேரப்படி, இரவு 7;30 மணிக்கு தோகாவில் தொடக்க விழா நடைபெற உள்ளது. உலக கோப்பை போட்டிகளின் போது LGBTQ தொடர்பான வாசகங்கள், போஸ்டர்கள் இடம்பெற கூடாது எனவும் மைதானங்களில் பீர் உள்ளிட்ட மது பானங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்கலீடையே சிறிது அதிருப்தியை அளித்துள்ளது.