இன்று பலருக்கும் தலைமுடி சார்ந்த பிரச்சனைகள் இருக்கின்றது.முடி உதிர்வு,பொடுகுத் தொல்லை,பேன் ஈறு தொல்லை,முடி வெடிப்பு,முடி வறட்சி போன்ற பாதிப்புகளை சந்தித்து வருபவர்கள் ரோஸ்மேரி எண்ணையுடன் சில பொருட்களை சேர்த்து தலைக்கு பயன்படுத்தி வரலாம்.
தேவையான பொருட்கள்:
1)ரோஸ்மேரி எண்ணெய் – ஒரு டேபுள் ஸ்பூன்
2)ஆலிவ் எண்ணெய் – ஒரு டேபுள் ஸ்பூன்
3)கற்றாழை பேஸ்ட் – ஒரு டேபுள் ஸ்பூன்
4)வைட்டமின் ஈ மாத்திரை – ஒன்று
செய்முறை விளக்கம்:
**முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் ஒரு டேபுள் ஸ்பூன் ரோஸ்மேரி எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள்.
**பின்னர் ஒரு டேபுள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை அதில் ஊற்றி மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
**பிறகு பிரஸான கற்றாழை மடலில் இருந்து தோலை நீக்கிவிட்டு அதன் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்துக் கொள்ள வேண்டும்.இதை ஸ்பூன் கொண்டு நன்றாக கலந்துவிட வேண்டும்.
**பின்னர் இந்த கற்றாழை ஜெல்லை ஆயில் கிண்ணத்தில் போட்டு நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
**அடுத்து ஒரு வைட்டமின் ஈ மாத்திரையை அதில் போட்டு நன்கு மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இந்த கலவையை தலைமுடிகளுக்கு அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.இதை தொடர்ந்து செய்து வந்தால் தலைமுடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.
**இதை அடிக்கடி தலைக்கு பயன்படுத்தி வந்தால் தலைமுடி உதிர்வு,தலையில் சிக்கு வாடை வருதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
1)வெட்டிவேர் – 25 கிராம்
2)தேங்காய் எண்ணெய் – 100 மில்லி
செய்முறை விளக்கம்:
**அடுப்பில் பாத்திரம் வைத்து 100 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
**பின்னர் 25 கிராம் அளவிற்கு வெட்டிவேரை அதில் போட்டு கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.இந்த எண்ணெயை ஆறவைத்து ஒரு பாட்டிலுக்கு ஊற்றி வைத்து தலைக்கு பயன்படுத்தி வந்தால் தலைமுடி ஆரோக்கியம் மேம்படும்.