பிரபு தேவாவிற்கு, பெண் குழந்தை”.. “50 வயதில் பிரபுதேவா நெகிழ்ச்சி”..

0
1101
For Prabhu Deva, Baby Girl”.. “Prabhu Deva Resilience at 50”..
For Prabhu Deva, Baby Girl”.. “Prabhu Deva Resilience at 50”..

நடிகர் பிரபு தேவா இவருக்கு “52 வயது” ஆகிறது. இவருடைய தந்தை பிரபல நடன இயக்குனர் “சுந்தரம் மாஸ்டர்”, இவருடைய மகனாக தான் முதலில் திரைத்துறையில் நுழைந்தார் “பிரபு தேவா”, பின் “வெற்றி விழா”, “அக்னி நட்சத்திரம்” போன்ற படங்களில் தனது நடன திறமையை திரைத்துறையில் நிரூபிக்க ஆரம்பித்தார், பின்னாளில் இந்தியாவின் “மைக்கேல் ஜாக்சன்” என்ற பெயரை அடையும் அளவிற்கு, இவருடைய நடனம் மிக சிறப்பாக அமைந்து பார்வையாளர்களை வியக்க வைத்தது.

நடிகை “கௌதமியுடன் ஜென்டில்மேன்” என்ற படத்தில் இடம்பெற்ற “சிக்கு புக்கு ரயிலு” என்ற பாடல் இவருடைய நடனம், தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்களை ஆட்டம் போட வைத்தது என்று சொன்னால் மிகையாகாது. இந்த பாடலில் நடனமாடியதை தொடர்ந்து இவருக்கு “கதாநாயகனாகும்” வாய்ப்பு வர தொடங்கியது. “1989ல்” நடிகை “ரோஜாவுடன்” தனது “முதல் படத்தில்” நடித்தார். பின்னர் “காதலன்” போன்ற நல்ல படங்களை கொடுத்து தனக்கென ரசிகர்களை உருவாக்கினார்.

பின்னாளில் விஜயை வைத்து “போக்கிரி” படத்தை இயக்கி, இயக்குனர் என்ற புது அவரதரத்தை தொடங்கினார். தமிழை தொடர்ந்து “ஹிந்தியிலும்” படங்களை இயக்க தொடங்கினார்.
பிரபு தேவாவிற்கு முதல் நடந்த “காதல் திருமணத்தில் மூன்று மகன்கள்” உள்ள நிலையில், முதல் மனைக்கும் இருவருக்கும் இடையே நடந்த கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டனர். பின்னர் சில நடிகைகளுடன் இணைத்து தேவா பற்றிய செய்திகள் வெளிவந்தன. ஆனால் இவை அனைத்தையும் பொய்யாக்கும் வகையில் மும்பையை சேர்ந்த “ஹிமானி” என்ற பெண்ணை கடந்த “2020 ல்” திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்த ‘”பெண் குழந்தை” தான் “சியா”, பிரபுதேவா தான் குழந்தைக்கு “சியா” என்ற பெயரை தேர்வு செய்ததாக தெரிவித்தார்.

எனக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதை நம்ப முடியவில்லை, “50 வயதில்” இருக்கும் என்னை என்னுடைய குழந்தை சியா “25 ஆக உணர” வைத்துள்ளார் என்று தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் பிரபு தேவா. பிரபு அவர்கள் குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை “சியா” என்பது குறிப்பிடத்தக்கது.

Previous article“ஃபெஞ்சல்” புயல் கோரத்தாண்டவம்!! சூறாவளி காற்றால் ஸ்தம்பித்த ECR!!
Next articleதனக்கு வாழ்வு கொடுத்த குருநாதருக்காக இசையமைத்த இளையராஜா!! பாடல்களுக்காகவே 100 நாட்கள் ஓடிய படம்!!