சபரிமலை செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு! பம்பையில் இருமுடி கட்ட கட்டணம் விவரம் வெளியீடு!
மிகவும் புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்று சபரிமலை ஐயப்பன் கோவில். இந்த கோவிலிற்கு பெண்கள் மாலை அணிந்தோ அல்லது சாமி தரிசனம் செய்யவோ செல்ல கூடாது என்பது ஐதீகம்.
இந்நிலையில் வருடத்தில் கார்த்திகை மாதம் தொடங்கியதில் இருந்தே பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து மலைக்கு செல்வார்கள்.
இங்கு வெளிநாடு மற்றும் வெளி ஊர்களிலில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.இந்நிலையில் கார்த்திகை மாதம் மட்டும் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும்.
பக்தர்களின் வசதிக்கேற்ப கூடுதலாக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகிறது.மேலும் தினந்தோறும் 55 ஆயிரம் பக்தர்கள் மாலை அணிந்து வருவதால் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றது.
சபரிமலை செல்லும் பக்தர்கள் இருமுடி கட்டி 18 ம் படி ஏற வேண்டும்.அதற்காக பம்பையில் உள்ள கணபதி கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பம்பை கணபதி கோவிலில் இருமுடி கட்ட விரும்பும் பக்தர்கள் ரூ 300 கட்டணம் செலுத்தி இருமுடி கட்டிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இருமுடிக்கு தேவையான நெய், தேங்காய், 18 ஆம் படியில் உடைக்க வேண்டிய தேங்காய் உள்பட அனைத்து பொருட்களும் வழங்கப்படும்.
இந்த சேவை 24 மணி நேரமும் வழங்கப்படும் சபரிமலை செல்லும் பக்தர்கள் மலை பாதையில் செல்லும்போது உடல்நல குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு உதவ சிறப்பு மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது.