பிளஸ் டூ அரியர் மாணவர்களின் கவனத்திற்கு! செய்முறை தேர்வு குறித்து வெளிவந்த முக்கிய தகவல்!

Photo of author

By Parthipan K

பிளஸ் டூ அரியர் மாணவர்களின் கவனத்திற்கு! செய்முறை தேர்வு குறித்து வெளிவந்த முக்கிய தகவல்!

Parthipan K

For the attention of Plus Two students! Important information about the selection process!

பிளஸ் டூ அரியர் மாணவர்களின் கவனத்திற்கு! செய்முறை தேர்வு குறித்து வெளிவந்த முக்கிய தகவல்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் பொது தேர்வானது ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டுதான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட தொடங்கியது.

அதனால் நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பின்படி அடுத்த மாதம் மார்ச் 13ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில்  செய்முறை தேர்வு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் பிளஸ் ஒன் வகுப்பில் செய்முறை தேர்வில் பங்கேற்காமல் தற்போது பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற உள்ளது.

அதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தலைமையாசிரியர் அரியர் மாணவர்களுக்கான பிளஸ்-1 செய்முறை தேர்வு மதிப்பெண் பட்டியல்களை வரும் பிப்ரவரி 22ஆம் தேதி முதல் dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் ஒன் படிக்கும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் மார்ச் ஒன்றாம் தேதி முதல் ஒன்பதாம் தேதி வரை நடைபெற உள்ளது பிளஸ் டூ அரியர் மாணவர்களுக்கும் இந்த தேதிகளில் செய்முறை தேர்வு நடத்தி முடிக்க வேண்டும். மதிப்பெண்களை மார்ச் 11ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.