ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு.. இன்று முதல் தரிசனம் செய்ய இணையதளத்தில் டிக்கெட் வெளியீடு!..
கொரோனா பரவ காரணமாக கடந்த சில மாதங்களாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேரடியாக டிக்கெட் விநியோகம் செய்வது தடை செய்யப்பட்டது. இதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் இந்த டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கப்பட்டு சில மணி நேரங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் தீர்ந்து போகின்ற நிலை ஏற்படுகிறது. அதனால் பக்தர்களும் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள். மேலும் சில பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்..
இந்நிலையில் முன்கூட்டியே தரிசனம் செய்ய டிக்கெட் குறைந்த விலையில் இணையதளத்தில் வெளியாக இருப்பதை தேவஸ்தானம் அதிகாரிகள் அறிவித்து வருகிறார்கள். அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகின்ற ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 10ம் தேதி வரை விரைவு தரிசனத்திற்காக ஆன்லைன் முன்பதிவு ஆகஸ்ட் 2 அதாவது நாளை தேவஸ்தான இணையதளத்தில் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி வரும் பக்தர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் டிக்கெட் விலை பதிவு செய்துவிட்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.