கோவை மாவட்ட மக்களின் கவனத்திற்கு!! இன்னும் சில தினங்கள் மட்டுமே.. இலவசத்தை மிஸ் பண்ணிறாதீங்க!!

Photo of author

By Sakthi

கோவை மாவட்ட மக்களின் கவனத்திற்கு!! இன்னும் சில தினங்கள் மட்டுமே.. இலவசத்தை மிஸ் பண்ணிறாதீங்க!!

Sakthi

For the attention of the people of Coimbatore!! Only a few days left.. Don't miss the freebie!!
கோவை மாவட்ட மக்களின் கவனத்திற்கு!! இன்னும் சில தினங்கள் மட்டுமே.. இலவசத்தை மிஸ் பண்ணிறாதீங்க!!
கோவை மாவட்டத்தில் நடந்து வரும் இலவச கால்பந்து பயிற்சி முகாம் முடிவடைய இன்னும் சில தினங்கள் தான் இருக்கின்றது. எனவே கால்பந்து பயிற்சியில் பங்கு பெற விரும்பும் அனைத்து மாணவர்களும் இதில் இலவசமாக பயிற்சி பெறலாம்.
கோவை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக கோடை கால கால்பந்து பயிற்சி முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கோடை கால கால்பந்து பயிற்சி முகாம் தினமும் நடைபெறுகின்றது. கால்பந்து விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைத்து மாணவர்களும் இதில் கலந்துகொண்டு இலவசமாக பயிற்சி பெறலாம்.
இந்த கோடை கால கால்பந்து பயிற்சி முகாம் கோவை மாவட்டம் சபர்பன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. தினமும் காலை 6.30 மணிமுதல் 8.30 மணி வரையிலும், மாலை 4.30 மணிமுதல் 6.30 மணி வரையிலும் நடைபெற்று வருகின்றது. இந்த கோடை கால இலவச கால்பந்து பயிற்சி முகாம் வரும் மே மாதம் 15ம் தேதி வரை மட்டுமே நடைபெறும்.
இதனால் இந்த கோடை கால கால்பந்து பயிற்சி முகாமல் கலந்து கொண்டு இலவசமாக பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் அனைவரும் 6369236502 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம். இதில் சிறந்த மாணவர்கள் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில் தங்கி பயிலலாம்.