தனித்தேர்வு எழுதிய மாணவர்களின் கவனத்திற்கு! இதனை சமர்பிக்க பிப்ரவரி மாதம் தான் இறுதியாகும்!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசு தேர்வு இயக்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட மொழி தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெறுவதற்கு விண்ணபிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி எட்டாம் வகுப்பு தேர்ச்சி உடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று NTC/NAC பெற்றவர்கள் பத்தாம் வகுப்புக்கு தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களில் தேர்ச்சி பெற்றால் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு இணையான சான்றிதழ் பெற முடியும்.
மேலும் இந்த சான்றிதழ் பெற வேண்டும் என்றால் மாணவர்கள் விண்ணப்ப படிவம் மற்றும் முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல் ஆகியவை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்த விவரங்கள் அனைத்தையும் மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் அல்லது தபால் மூலமாக வரும் பிப்ரவரி மாதம் 28 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.