பிளஸ் டூ பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் கவனத்திற்கு! இந்த சலுகை உங்களுக்கு கிடையாது!

0
383
For the attention of the teachers involved in Plus Two Public Examinations! You don't have this offer!
For the attention of the teachers involved in Plus Two Public Examinations! You don't have this offer!

பிளஸ் டூ பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் கவனத்திற்கு! இந்த சலுகை உங்களுக்கு கிடையாது!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதன் காரணமாக பொது தேர்வுகள் மற்றும் போட்டி  தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல்  அனைத்தும் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது.

பொது தேர்வு மார்ச் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்று  வெளியிட்டது. அந்த அறிவிப்பில் இத்தேர்வு பணியில் ஈடுபட உள்ள அதிகாரிகள், அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட கல்வித்துறை சார்பாக திருப்பூரில் நடைபெற்றது. அந்த மாவட்டத்தில் உள்ள 92 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொதுத்தேர்வு பணியில் ஈடுபட உள்ளனர். முதன்மை கண்காணிப்பாளர், தேர்வு கூட கண்காணிப்பாளர் போன்றோர் பங்கேற்றனர்.

அப்போது முதன்மை கல்வி அலுவலரான திருவளர் செல்வி கூறுகையில் பொதுத்தேர்வுக்கு முதன்மை கண்காணிப்பாளர் தேர்வு கூட கண்காணிப்பாளர் போன்ற தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை சரியாக செய்து முடிக்க வேண்டும். அதுமட்டுமின்றி  வினாத்தாள், விடைத்தாள் வழங்கிய நேரம், தேர்வு தொடங்கிய நேரம், முடிவடையும் நேரம், தேர்வின் போது ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மணி அடிப்பது போன்ற தேர்வுகளை கொடுத்த வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டும்.

இது குறித்து மாணவர்களுக்கு முன்னதாகவே விளக்கமளிக்க வேண்டும் எனவும் கூறினார். அதுமட்டுமின்றி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவதை காரணமாக வைத்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படுவதில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும். இது தொடர்பாக அனைத்து பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள் முன்னதாகவே ஆலோசனை நடத்தி அதற்கு தகுந்தார் போல் பள்ளி செயல்படும் நேரம் மற்றும் பாடவேளை மாற்றி அமைக்க வேண்டும்.

தேர்வு மையங்களாக உள்ள பள்ளிகளில் முழு பாதுகாப்பு உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். தேர்வு பணியில் ஈடுபடும் முதன்மை கண்காணிப்பாளர், தேர்வு கூட பொறுப்பாளர் விடுப்பு எடுக்கக் கூடாது எனவும் அவர்களுக்கு தேர்வு காலத்தில் பணி விளக்கு கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleதொலைதூரக் கல்வி தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! ஹால் டிக்கெட் குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு!
Next articleமூன்றரை ஆண்டு பணி முடித்து வீடு திரும்பிய அக்னி வீரர்களுக்கான புதிய வாய்ப்பு! மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்!