பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களின் கவனத்திற்கு! இந்த செயலை செய்தால் குடும்பமே சிதைந்து விடும் கவனமாக இருங்கள்!

0
168

பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களின் கவனத்திற்கு! இந்த செயலை செய்தால் குடும்பமே சிதைந்து விடும் கவனமாக இருங்கள்!

ஒரு குடும்பம் என்றால் தாய், தந்தை மற்றும் பிள்ளைகள், தான், அந்த பிள்ளைகள் ஆண் என்றாலும் பெண் என்றாலும் பிள்ளைகளாக இருந்தாலே மகிழ்ச்சி தான். ஆஸ்திக்கு ஆணும், ஆசைக்கு பெண்ணும் என்று அந்த காலத்தில் பழமொழி கூறுவார்கள். ஆனால் இன்று ஆணும், பெண்ணும் சரிசமம் என்பதால் எல்லா விஷயத்திலும் ஆணுக்கு நிகராக பெண்ணை பார்ப்பது வரவேற்கத்தக்க ஒன்றாக அமைந்துள்ளது. மேலும் குடும்பத்தில் இருந்து பெண் பிள்ளையை திருமணம் செய்து கொடுத்த பிறகு இந்த ஒரு தவறை நீங்கள் செய்தால் உங்கள் குலம் அடுக்கடுக்காக பிரச்சனைகளை சந்திக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

தற்போது மாறிவரும் காலத்திற்கு ஏற்ப பெண்களுடைய சுதந்திரமும் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. ஆண் பிள்ளைக்கு கிடைக்கக்கூடிய அத்தனை விஷயங்களும் இப்போது பெண் பிள்ளைகளுக்கும் கிடைக்கிறது. இருந்தாலும் பெண் பிள்ளைகளை கருவிலேயே கொல்லப்படுவது இன்று வரை நடந்தது தான் வருகின்றது. உலக அளவில் பெண்களைக் காட்டிலும், ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் காலப்போக்கில் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் ஆண் அலைய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

உங்கள் குடும்பத்தில் இருக்கும் பெண் மற்றொரு குடும்பத்திற்கு சென்று விட்டாலும் அவள் மகிழ்ச்சியாக இருந்தால் தான் இந்த குடும்பம் பேரும், புகழோடும் சிறப்பாக இருக்கும். பெண் பிள்ளையை புகுந்த வீட்டிற்கு அனுப்பி விட்டோம் என்று நீங்கள் அலட்சியமாக இல்லாமல் அவள் அங்கு எப்படி இருக்கிறாள், என்றும் அவள் அங்கே மகிழ்ச்சியாக இருக்கிறாளா இல்லையா என்பதை அவ்வப்போது கவனிக்க வேண்டும். மேலும் சகோதர, சகோதரிகளுக்கு வருடம் ஒரு முறை சகோதரர்கள் ஒன்றாக சேர்ந்து பச்சை நிறத்தில் புடவை வாங்கி கொடுக்க வேண்டும். இதனால் அவர்களுக்குள் ஒற்றுமை பலப்படும். மேலும் குடும்பத்தில் இருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் குறிப்பாக தாய், தந்தையரை இழந்த திருமணம் முடித்த பெண்களுக்கு அவளுடைய குடும்பத்தார் அப்படியே அவர்களை விட்டு விடாமல் இது போன்ற செயல்களை செய்து மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டால் அந்த மகாலட்சுமியே உங்களுக்கு செல்வ மழையை பொழிய வைப்பால் என்கிறது சாஸ்திரம். எனவே பெண் பிள்ளைகளை ஏங்க விடாமல் திருமணம் முடிந்த பிறகும் ஒரு பாதுகாப்பு உணர்வை அளித்து நீங்களும் உங்கள் குலத்தை காத்துக் கொள்ளுங்கள் என கூறுகிறார்கள்.

Previous articleவழிப்பறியில் ஈடுபட்ட சிறுவர்கள்! கரூரில் அரங்கேறிய சம்பவம்!
Next articleஇந்த சின்ன முட்டைக்குள் இவளோ பெரிய வீசியமா இருக்கு!