240 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக! மேன் குரூப் நிறுவனம் அறிவிப்பு!!

Photo of author

By Savitha

240 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக! மேன் குரூப் நிறுவனம் அறிவிப்பு!
முதலீட்டு மேலாண்மை நிறுவனமான Man Group நிறுவனம் தனது 240 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக பெண் ஊழியரை பணியில்  நியமிக்க அனுமதி அளித்துள்ளது. அதாவது புதிய சி.இ.ஓ-வாக பெண் ஒருவரை நியமிக்க அனுமதி அளித்துள்ளது.
லண்டனில் 1783ம் ஆண்டு மேன் குரூப்(Man Group) நிறுவனம் தொடங்கப்பட்டது. அப்போது இருந்து 1869ம் ஆண்டு வரை மேன் குரூப் நிறுவனம் ராயல் கடற்படைக்கு ரம் மற்றும் சர்க்கரைகளை வழங்கி வந்தது. அதற்கு பிறகு மேன் குரூப் நிறுவனம் இப்போது வரை நிதித்துறையில் கவனம் செலுத்தி வருகின்றது.
இந்த நிலையில் மேன் குரூப் நிறுவனம் பெண் ஊழியரை சி.இ.ஓ-வாக நியமிக்கவுள்ளது. மேன் குரூப் நிறுவனம் தொடங்கி இதுவரை அதாவது 240 ஆண்டுகளாக சி.இ.ஓ பதவியில் பெண் ஊழியர் இருந்தது இல்லை. இப்போது முதல் முறையாக பெண் ஊழியரை நியமிக்க மேன் குரூப் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. தற்போது சி.இ.ஓ-வாக இருக்கும் எல்லிஸ் அவர்கள் செப்டம்பர் மாதம் 1ம் தேதி ஓய்வு பெறப் போகிறார். அதற்கு பிறகு ராபின் க்ரூ என்ற பெண் மேன் குரூப் நிறுவனத்தின் அடுத்த சி.இ.ஓ-வாக பதவியேற்க உள்ளார்.