Breaking News

தமிழகத்தில் முதல் முறையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ராகி வழங்கும் திட்டம்!

தமிழகத்தில் முதல் முறையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ராகி வழங்கும் திட்டம்!

தமிழகத்தில் முதல் முறையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ராகி(கேழ்வரகு) வழங்கும் திட்டம் நீலகிரி மாவட்டத்தில் தொடக்கம்.

தமிழக முதல்வர் குடும்ப அட்டைதாரருக்கு ராகி (கேழ்வரகு) வழங்கபடும் என ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில் உதகை அருகே உள்ள பாலகொலா மலை கிராமத்தில் உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.

இத்திட்டத்திற்காக 1350 மெட்ரிக் டன் ராகி மத்திய உணவு கழகத்தில் இருந்து ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது, அதில் நீலகிரி மாவட்டத்திற்கு மாதத்திற்கு 400 மெட்ரிக் டன் தேவை உள்ளது. ஆனால் தற்போது 482 மெட்ரிக் டன் ராகி நீலகிரியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் 2 லட்சம் 29 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ ராகி வழங்கபடுகிறது.

தமிழகம் முழுவதும் வினியோகம் செய்யும் அளவுக்கு ராகி இல்லாததால் நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் முதல் முறையாக இத்திட்டம் தொடங்கபட்டுள்ளது. பின்னர் படி படியாக தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தபடவுள்ளது.