ஆண்,பெண் தங்கள் தலைமுடி அடர்திக்கு பல விஷயங்களை பின்பற்றி வருகின்றனர்.செயற்கை முறையில் முடியை பராமரிப்பதைவிட இயற்கை முறையில் தலைமுடியை பராமரித்தால் முடி உதிராமல் இருக்கும்.இது தவிர நல்ல உணவுப்பழக்க வழக்கங்களை பின்பற்றி வந்தால் தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும்.
உலர் விதைகளை சாப்பிட்டால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.பாதாம்,வால்நட்,பிஸ்தா போன்ற பருப்பை சாப்பிட்டு வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.இதைவிட பிரேசில் நட்ஸ் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.பிரேசில் நட்ஸில் செலினியம் சத்து அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.தினமும் இரண்டு பிரேசில் நட்ஸ் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்படும்.பிரேசில் நட்ஸில் உள்ள செலினியம் சத்து மலட்டு தன்மையை குறைக்க உதவுகிறது.
பிரேசில் நட்ஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
1)புரதம்
2)கொழுப்பு
3)செலினியம்
4)இரும்பு
5)துத்தநாகம்
6)பொட்டாசியம்
7)கால்சியம்
8)நல்ல கொழுப்பு
பிரேசில் நட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
1.தைராய்டு பாதிப்பு குணமாக பிரேசில் நட்ஸ் சாப்பிடலாம்.இதில் இருக்கின்ற செலினியம் புற்றுநோய் பாதிப்பை குணப்படுத்த உதவுகிறது.
2.பிரேசில் நட்ஸில் உள்ள ஆரோக்கிய கொழுப்பு இதயத்தை பாதுகாக்கிறது.உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
3.பிரேசில் நட்ஸ் சாப்பிட்டால் உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்கும்.டைப் 2 நீரிழிவு நோய் பாதிப்பு குணமாக பிரேசில் நட்ஸ் சாப்பிடலாம்.
4.செரிமானப் பிரச்சனையை சரி செய்ய பிரேசில் நட்ஸ் சாப்பிடலாம்.பிரேசில் நட்ஸில் உள்ள கால்சியம் சத்து எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.மூளை ஆரோக்கியம் மேம்பட பிரேசில் நட்ஸ் சாப்பிடலாம்.