பெண்களே உங்களுக்குத்தான்!! மத்திய அரசின் ரூ.3,00,000 வட்டியில்லா கடன்.. உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!
மத்திய அரசின் சிறப்பான திட்டங்களில் ஒன்று “உத்யோகினி”.இவை சுயத் தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்காக கொண்டுவரப்பட்டவை.நம் நாட்டில் ஏழை பெண்கள் பலர் சுயமாக தொழில் செய்ய ஆர்வம் கொள்கின்றனர்.ஆனால் அவர்களுக்கு முட்டுக்கட்டையாக இருப்பது பணம்.இதனால் அவர்களின் சுயத் தொழில் தொடங்க வேண்டுமென்ற கனவு நிறைவேறாமல் போய்விடுகிறது.
இந்நிலையில் சொந்தமாக தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு மத்திய அரசு உத்யோகினி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி ரூ.1,00,000 முதல் ரூ.3,00,000 வரை வட்டியில்லா கடன் வழங்கி வருகிறது.இத்திட்டத்தின் சிறப்பு எண்னென்றால் நீங்கள் வாங்கிய கடனிற்கு 50% மானியம் கிடைக்கும்.
அதன்படி மளிகை கடை,பேக்கரி,அழகு நிலையம்,காபி மற்றும் தேயிலை தூள் தயாரிப்பு,தையல் கடை,மண்பாண்டம்,காகித தட்டு என்று சிறிய அளவிலான குடிசை தொழில்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் வட்டியில்லா கடன் பெற முடியும்.
உத்யோகினி திட்டத்திற்கான தகுதி
சுயத் தொழில் தொடங்க உள்ள பெண்கள் மட்டுமே இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய முடியும்.
18 வயது முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் இந்த திட்டத்திற்கு தகுதியானார்கள் ஆவர்.
விண்ணப்பம் செய்ய உள்ள பெண்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,00,000 மிகாமல் இருக்க வேண்டும்.இதில் விதவை மற்றும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு வருமான வரம்பு இல்லை.
விண்ணப்பதாரரின் கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருக்க வேண்டும்.இதற்கு முன்னர் கடன் ஏதும் வாங்கியிருக்க கூடாது.
உத்யோகினி திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய தேவைப்படும் ஆவணங்கள்
1)பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
2)ஆதார் அட்டை,ரேசன்,ஓட்டர் ஐடி
3)நீங்கள் செய்ய உள்ள தொழிலின் விரிவான திட்ட அறிக்கை
4)வருமானச் சான்றிதழ்
5)வணிக முதலீடு விவரங்கள்
விண்ணப்பம் செய்வது எப்படி?
இணையத்தில் உள்ள உத்யோகினி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களை இணைத்து வங்கி மேலாளரிடம் கொடுக்க வேண்டும்.பிறகு வங்கி மேலாளர் ஆய்வு செய்து கடன் வழங்குவார்.