ஒரே வாரத்தில் முன் நெற்றியில் முடி வளர.. கீழா நெல்லி எண்ணெயை தடவுங்கள்!!

Photo of author

By Divya

இன்றைய காலத்தில் பலருக்கு முடி உதிர்தல் பிரச்சனை இருக்கின்றது.குறிப்பாக முன்நெற்றி பகுதியில் தலை முடி உதிர்ந்து வழுக்கை விழுகிறது.முன் நெற்றி பகுதியில் முடி உதிர்வு இன்று புதிய முடி வளர கீழே கொடுக்கப்பட்டுள்ள மூன்று வகை எண்ணையில் ஏதேனும் ஒன்றை தயார் செய்து பயன்படுத்தவும்.

தேவையான பொருட்கள்:-

1)கீழா நெல்லி – ஒரு கைப்பிடி
2)தேங்காய் எண்ணெய் – 250 மில்லி

செய்முறை விளக்கம்:-

*முதலில் பாத்திரம் ஒன்றில் 250 மில்லி சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து பற்ற வைக்கவும்.

*பிறகு ஒரு கைப்பிடி கீழாநெல்லி செடியை பொடியாக நறுக்கி சூடாகி கொண்டிருக்கும் தேங்காய் எண்ணையில் போட்டு கொதிக்க வைக்கவும்.

*பிறகு அடுப்பை அணைத்து கீழாநெல்லி எண்ணெயை நன்றாக ஆறவிடவும்.அதன் பிறகு ஈரமில்லாத பாட்டிலில் கீழாநெல்லி எண்ணெயை வடிகட்டி சேமித்துக் கொள்ளவும்.

*இந்த எண்ணெயை தலைக்கு அப்ளை செய்து வந்தால் முடி உதிர்வு பிரச்சனை சரியாகும்.முன் நெற்றி பகுதியில் முடி உதிர்வு பிரச்சனை இருப்பவர்களுக்கு கீழாநெல்லி எண்ணெய் சிறந்த தீர்வாகும்.

தேவையான பொருட்கள்:-

1)வெந்தயம் – 50 கிராம்
2)தேங்காய் எண்ணெய் – 300 மில்லி

செய்முறை விளக்கம்:-

*அடுப்பில் வாணலி வைத்து 50 கிராம் அளவிற்கு வெந்தயம் போட்டு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

*பிறகு அதில் 300 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.

*இந்த எண்ணெயை ஆறவிட்டு ஒரு பாத்திரத்திற்கு வடிகட்டி சேகரித்து வைத்துக் கொள்ளவும்.தயாரிக்கப்பட்ட வெந்தய எண்ணெயை முன் நெற்றி பகுதியில் தடவி வந்தால் புதியமுடி வளரும்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய்
2)சின்ன வெங்காயம்

செய்முறை விளக்கம்:-

*பத்து சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து 150 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

*அதன் பிறகு சின்ன வெங்காய சாறை தேங்காய் எண்ணையில் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.

*இந்த எண்ணெயை ஆறவிட்டு தலைக்கு பயன்படுத்தி வந்தால் முடி உதிர்தல் நின்று புதிய முடி வளரும்.