இந்தியர்கள் இந்த நாட்டுக்கு செல்ல முடியாது! நோ வே போட்ட வெளிநாட்டு அரசாங்கம்!
இந்தியாவில் தற்போது கரோனா தொற்றானது அதிக அளவில் பரவி வருகிறது. ஒரு நாளில் மட்டும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,15,736 ஆக உள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 8,43,473 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வின் 2வது மற்றும் 3வது அலை தீவிரமாக பரவி வருகிறது. அதுமட்டுமின்றி பல கட்சி வேட்பாளர்கள் மற்றும் நடிகை நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் என அனைவருக்கும் அதிக அளவு தொற்று பரவி வருகிறது.
தற்போது இந்தியாவில் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போது அதிக இடங்களில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார்.அப்போது அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு வந்துவிட கூடாது என்பதற்காக இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதுமட்டுமின்றி அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி வலியுறுத்தினார். அதிக அளவு இந்தியாவில் கொரோனா பாதித்துள்ளது.
அதனால் நியூசிலாந்து அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அவர்கள் கூறியதாவது, இந்தியாவிலிருந்து நியூசிலாந்திற்கு வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து அரசு தடை விதித்துள்ளது. ஏனென்றால் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் அதிகப்படியானோர் உள்ளனர். அவர்களில் யாரேனும் நியூசிலாந்து வந்தால் நியூசிலாந்தில் வசிக்கும் மக்களுக்கும் அத்தொற்று வேகமாக பரவக்கூடும். அதன்பின் இந்தியாவை போல கட்டுக்குள் கொண்டு வர முடியாது அளவிற்கு நியூசிலாந்தும் அந்நிலைக்கு தள்ளப்படும்.அதனால் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து அரசு தடை விதித்துள்ளது. இச்செய்தியைக் கேட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவு கவலை கொண்டுள்ளனர்.