ரஷ்யா மற்றும் உக்ரைனிடையே போர் பதற்றம் ஏற்படுகின்ற சூழ்நிலையில், இந்த மாதம் தொடக்கம் முதலே உலக அளவில் பங்குச் சந்தைகளில் உறுதியான தன்மை நிலவவில்லை என்று சொல்லப்படுகிறது.
இது இந்திய பங்குச் சந்தைகளிலும் பிரதிபலித்து வருகிறது. அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்து வசூலிப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்ததால் பங்குச்சந்தைகளில் உறுதியான தன்மை குறைந்துவிட்டது.
இந்த நிலையில், இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்திருந்த அன்னிய முதலீட்டாளர்கள் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையில் 18,856 கோடி முதலீடுகளை திரும்பப்பெற்றிருக்கிறார்கள் .
ஒட்டு மொத்தமாக 15 342 கோடி மதிப்பிலான பங்குகளையும், 3,629 கோடி மதிப்பிலான பத்திரங்களையும், அவர்கள் விற்பனை செய்திருக்கிறார்கள். பங்குசந்தையில் நிலைத்தன்மை ஏற்படாத வரையில் அந்நிய முதலீடு வெளியேற்றம் தொடரும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மத்திய நிதியமைச்சகம் கவலை கொண்டுள்ளது இதனை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை போதுமான வரையில் மிக விரைவில் தொடங்க வேண்டும் என்பதே பங்குச்சந்தை ஆர்வலர்களின் கருத்தாக இருந்து வருகிறது.
ஆனாலும் இது உலகளாவிய பிரச்சினை என்பதால் இந்தியா மட்டும் இதனை சரி செய்துவிட முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.