பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது

Photo of author

By Anand

பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது

Anand

Former ADMK Minister-Manikandan arrested Today

பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது

நாடோடிகள் திரைப்படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை சாந்தினி.மலேசியா நாட்டின் குடியுரிமையை பெற்ற இவர் சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருகிறார்.இந்நிலையில் இவர் சமீபத்தில் திமுக ஆட்சியேற்ற சில தினங்களில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்தார்.சென்னை கமிஷனர் அலுவலகதில் இதுகுறித்து அவர் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அந்த புகார் மனுவில், முன்னாள் அமைச்சரான மணிகண்டன் தன்னை திருமணம் செய்வதாக கூறி உறவு வைத்து கொண்டார். இருவரும் ஏறக்குறைய 5 வருடங்கள் கணவன்-மனைவி போல வாழ்ந்தோம். இதானால் நான் 3 தடவை அவரால் கர்ப்பம் அடைந்தேன். அந்த நேரத்தில் அவர் மிரட்டியதால் கருவை கலைத்தேன். இந்நிலையில் தற்போது அவர் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். மேலும் அவர் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார், என்று தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து நடிகை சாந்தினி அளித்த இந்த புகார் மனு மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதற்காக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 6 சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

நடிகை சாந்தினி
நடிகை சாந்தினி

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் முன் ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சரின் இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்ய காவல் துறையினர் விரைந்தனர். குறிப்பாக தலைமறைவாக உள்ள அவரைப் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், நடிகை சாந்தினியால் பாலியல் புகார் அளிக்கப்பட்டு காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் இன்று கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மணிகண்டனை காவல் துறை அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.