Breaking News

அதிமுக முன்னாள் எம் எல் ஏ தூக்கிட்டு தற்கொலை!!

அதிமுக முன்னாள் எம் எல் ஏ தூக்கிட்டு தற்கொலை!!

புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நடராஜன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி உழவர்கரை தொகுதி அதிமுக முன்னாள் எம் எல் ஏ நடராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்ப தகராறு காரணமாக வில்லியனூரில் உள்ள தனது வீட்டில் நடராஜன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இவர் 1996ஆம் ஆண்டில் இருந்து 2001ஆம் ஆண்டு வரை இரண்டு முறை அதிமுக எம்எல்ஏவாக இருந்துள்ளார்.

Leave a Comment