இந்திய அணியின் முன்னாள் கேப்டன் காலமானார்!!! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அணியின் சுழற்பந்து வீச்சாளருமான பிஷன் சிங் பேடி அவர்கள் இன்று(அக்டோபர்23) காலமானார். இவரது மறைவுச் சொய்தியை கேட்ட ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்காக 1967ம் ஆண்டு முதல் தன்னுடைய கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய வீரர் பிஷன் சிங் பேடி அவர்கள் 1979ம் ஆண்டு வரை விளையாடினார். பிஷன் சிங் பேடி அவர்கள் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஆவார். சுமார் 12 ஆண்டுகள் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடிய பிஷன் சிங் பேடி அவர்கள் 1976ம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
அதன் பிறகு மூன்று ஆண்டுகள் இந்திய அணியின் கேப்டனாகவும் பின் சிங் பேடி அவர்கள் விளையாடியுள்ளார். இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பிஷன் சிங் பேடி அவர்கள் 656 ரன்களும் 266 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். மேலும் இந்திய அணிக்காக 10 ஒருநாள் போட்டிகளிலும் பிஷன் சிங் பேடி அவர்கள் விளையாடியுள்ளார்.
அது மட்டுமில்லாமல் 370 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள 3584 ரன்களும், 1560 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். இவருடைய மகன் அங்கத் சிங் பேடி அவர்கள் ஒரு நடிகர் ஆவார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிஷன் சிங் பேடி அவர்கள் பயிற்சியாளராகவும் வர்ணனையாளராகவும் பணியாற்றியுள்ளார். பிஷன் சிங் பேடி அவர்களுக்கு கடந்த 1970ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது.
77 வயதாகும் பிஷன் சிங் பேடி அவர்கள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று(அக்டோபர்23) பிஷன் சிங் பேடி அவர்கள் காலமானார். இவருடைய மறைவுக்கு கிரிக்கெட் வீரர்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.