முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. காலமானார்!

Photo of author

By Parthipan K

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், அமமுக அமைப்புச் செயலாளருமான சிவராஜ் நேற்று காலமானார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 65). காங்கிரஸ் கட்சியில் மாவட்ட தலைவராக செயல்பட்ட இவர் காங்கிரஸ் கட்சி சார்பில் ரிஷிவந்தியம் தொகுதியில் 1984, 1996, 2001, 2006 ஆகிய நான்கு சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து, தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு கட்சியின் மாநில அமைப்பு செயலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிவராஜ் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.