பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட்டரா!!! இத எதிர்பார்க்கவே இல்லையே!!!

0
29
#image_title

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட்டரா!!! இத எதிர்பார்க்கவே இல்லையே!!!

விரைவில் தொடங்கவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஒருவர் போட்டியாளராக கலந்து கொண்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

பிக்பாஸ் நிகழ்ச்சியானது ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, மராத்தி ஆகிய தேதிகளில் நடைபெற்று வருகின்றது. இதில் தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் அக்டோபர் 1ம் தேதி தொடங்குகிறது.

இதே போல கன்னட மெழியில் பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் 8ம் தேதி தொடங்குகிறது. வழக்கம் போல கன்னட மொழியின் 8வது சீசனையும் நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கவுள்ளார்.

இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசனில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார் அவர்கள் போட்டியிளாராக கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார் இந்திய அணிக்காக ஒருநாள், டி20, டெஸ்ட் ஆகிய போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி 63 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் விளையாடி உள்ளார்.

இந்நிலையில் வினய் குமார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மேலும் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் அவர்கள் ஹிந்தியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 12வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.