Vinod Kambli: முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்பிளி-க்கு மூளையில் ரத்தம் உறைந்து இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியில் 9 ஆண்டுகள் சிறப்பாக விளையாடியவர் வினோத் காம்பிளி இவர். வினோத் காம்பிளி (52) பேட்ஸ்மேனாக இந்திய கிரிக்கெட் அணியில் வளம் வந்தவர் டெஸ்ட் போட்டிகளில் 2 இரட்டை அடித்து இருக்கிறார். இவர் கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் பள்ளி பருவ நண்பர் ஆவார். இவர் பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் உடன் இணைந்து 664 ரன்கள் குவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சச்சின் டெண்டுல்கர் மற்றும் வினோத் காம்பிளிக்கு ஆரம்பகால தொடக்க காலத்தில் கிரிக்கெட் ஆசானாக இருந்த பயிற்சியாளர் மறைந்த ராம்கண்ட் அர்ச்சேக்கரை சிறப்பிக்கும் பள்ளி விழாவில் கலந்து கொண்டபோது இவரது தோற்றம் மிகவும் மெலிந்து மோசமாக இருந்தை பார்த்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருந்தார்கள்.
இந்த அதன் பிறகு அவர் தானே மாவட்டத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிறுநீரக பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார் என மருத்துவ சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு உடல் முழுவதும் பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது.
அப்போது அதிர்ச்சி அளிக்கும் விதமாக பரிசோதனை முடிவு வந்து இருக்கிறது. அதாவது அவருக்கு மூளையில் ரத்தம் உறைந்து போய் இருக்கிறது என கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது தீவிர சிக்க்கியாயில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவர் நலமுடன் மீண்டு வர வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.