எம்.எஸ் தோனியின் சாதனையை முறியடித்த முன்னாள் சிஎஸ்கே வீரர்!!! 

0
118
#image_title

எம்.எஸ் தோனியின் சாதனையை முறியடித்த முன்னாள் சிஎஸ்கே வீரர்!!!

இன்று(செப்டம்பர்25) நடைபெற்ற கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் கய்னா அமேசான் வாரியர்ஸ் அணி முதன் முறையாக கோப்பையை வென்றது. இதையடுத்து அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த இம்ரான் தாஹிர் அவர்கள் எம்.எஸ் தோனி அவர்களின் சாதனையை முறியடித்துள்ளார்.

கரீபியன் பிரீமியர் லீக்கில் இன்று(செப்டம்பர்25) நடைபெற்ற இறுதிப் போட்டியில் பொல்லார்ட் தலைமையிலான ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும் இம்ரான் தாஹிர் தலைமையிலான கய்னா அமேசான் வாரியர்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற கய்னா அமேசான் வாரியர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் கய்னா அமேசான் வாரியர்ஸ் அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து அந்த அணி 18.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 94 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக கீசி கார்டு என்பவர் 38 ரன்கள் சேர்த்தார். கய்னா அமேசான் வாரியர்ஸ் அணியில் பந்துவீச்சில் டுவைய்ன் பிரிட்டோரியஸ் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இம்ரான் தாஹிர், மோட்டி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். ரொமாரியோ சேப்பர்ட், ஆர் பீட்டன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். இதனால் கய்னா அமேசான் வாரியர்ஸ் அணிக்கு 95 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய கய்னா அமேசான் வாரியர்ஸ் அணி 1 விக்கெட்டை மட்டும் இழந்து 14 ஓவர்களின் முடிவில் 99 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கய்னா அமேசான் வாரியர்ஸ் அணியில் சால்ம் அயுப் அரைசதம் அடித்து 52 ரன்கள் சேர்த்தார். சாய் ஹோப் 32 ரன்கள் சேர்த்தார்.

இறுதிப் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கய்னா அமேசான் வாரியர்ஸ் அணி கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் கோப்பையை கைப்பற்றியது. 5 முறை இறுதிப் போட்டிக்கு சென்று ஏமாற்றம் அடைந்த கய்னா அணி தற்பொழுது முதன்முறையாக கோப்பையை கைப்பற்றி உள்ளது. ஆட்ட நாயகன் விருதை டுவைன் பிரிட்டோரியஸ் கைப்பற்றினார். தொடர்பு நாயகன் விருது சாய் ஹோப்பிற்கு வழங்கப்பட்டது. இதனால் கய்னா அமேசான் வாரியர்ஸ் அணியின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் கய்னா அமேசான் வாரியர்ஸ் அணியின் கேப்டன் இம்ரான் தாஹிர் அதிக வயதில் கோப்பையை வென்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இவர் முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ் தோனி அவர்களின் சாதனையை முறியடித்துள்ளார்.

எம்.எஸ் தோனி அவர்கள் 41வது வயதில் ஐபிஎல் கோப்பையை வென்றதை இதுவரை சாதனையாக இருந்தது. இந்நிலையில் இந்த சாதனையை அமேசான் வாரியர்ஸ் கேப்டன் இம்ரான் தாஹிர் முறியடித்துள்ளார். இம்ரான் தாஹிர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சில சமயங்களில் விளையாடியுள்ளார். குறிப்பாக 2018ம் ஆண்டு சென்னை அணி கோப்பையை வெல்லும் பொழுது இவரது பங்களிப்பு சிறப்பானதாக இருந்தது.

 

Previous articleஅப்பாவுடன் கூட்டணி போட்ட மகள்!!
Next articleகீழடி அகழாய்வில் அழகிய வேலைபாட்டுடன் கூடிய சூதுபவள மணி கண்டுபிடிப்பு!!!