கீழடி அகழாய்வில் அழகிய வேலைபாட்டுடன் கூடிய சூதுபவள மணி கண்டுபிடிப்பு!!!

0
31
#image_title

கீழடி அகழாய்வில் அழகிய வேலைபாட்டுடன் கூடிய சூதுபவள மணி கண்டுபிடிப்பு!!!

வாழ்வாங்கு வாழ்ந்த தமிழர்களின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் சிவகங்கை மாவட்ட கீழடி அகழாய்வு அமைந்துள்ளது.இதன்பொருட்டு 9ம் கட்ட அகழாய்வு கடந்த 2016ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடந்து வருகிறது.இந்த அகழாய்வில் நாளொருவண்ணம் பல்வேறுபட்ட அரிய பொருட்கள் கிடைத்தவாறு உள்ளது.

இந்த அகழாய்வில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழிகள்,அணிகலன்கள்,ஆயுதங்கள்,கண்ணாடி மணிகள் போன்ற அரிய பொருட்கள் கிடைத்தவண்ணம் உள்ளது.அவ்வாறு கிடைத்த தொல்பொருட்களை ஆவணப்படுத்திய பிறகு பொதுமக்கள் பார்வைக்கு அருங்காட்சியகத்தில் வைக்கப்படும்.

இவ்வரிசையில் அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய கார்லியன் மணி என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சிகப்பு சூதுபவள மணி முதுமக்கள் தாழிக்குள்ளிருந்து கண்டறியப்பட்டுள்ளது.இந்த சூதுபவள மணி1.5 நீசெ.மீ நீளமும் 2செ.மீ விட்டமும் கொண்ட பீப்பாய் வடிவிலான சூதுபவள மணியாகும்.

இதுவரை ஒரே வடிவத்தில் எந்த வேலைப்பாடுகளும் இல்லாத மணிகள்தான் கிடைத்துவந்துள்ளன. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள மணி சிகப்பு நிறத்தில் வரிவரியாக அழகிய வேலைபாட்டுடன் கிடைத்துள்ளது.இம்மணிகளை நமது முன்னோர்கள் கோர்த்து ஆபரணமாக அணிந்திருக்க கூடும் எனவும் தொல்பொருள் ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.