முன்னாள் துணை முதல்வர் மற்றும் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம்!!
ராஜஸ்தான் மாநிலத்தில் முந்தைய பாஜக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக மாநில காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வரும் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவருமான சச்சின் பைலட் இன்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார்.
சச்சின் பயலெட்டின் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
பாஜகவுக்கு எதிரான போராட்டமாக இது பார்க்கப்பட்டாலும் உண்மையில் காங்கிரஸ் முதல்வர் அசோக் கேரக்டருக்கு எதிரான போராட்டமாகவே காங்கிரஸ் கட்சி கருதுகிறது.
இந்த நிலையில் தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டார் சச்சின் பைலட்.
ஊழல் விவகாரம் குறித்து சச்சின் பைலட் தன்னிடம் எதையும் தெரிவிக்கவில்லை என ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ராந்தவா தெரிவித்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தவர் ராந்தவா காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக சில நாட்களுக்கு முன்பு தான் பொறுப்பேற்றதாகவும்.
இதற்கு முன்பு இருந்த பொறுப்பாளரிடம் இந்த விவகாரம் குறித்து தான் ஏற்கனவே விவாதித்து இருந்தபோதிலும் ஊழல். விவகாரம் இன்றும் தொடர்வதாக குறிப்பிட்டார்.
ஊழலுக்கு எதிராக நாம் பேச வேண்டும் என தெரிவித்தவர் ஊழலுக்கு எதிரான போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார்.