ருத்ர தாண்டவம் படம் குறித்து பிரபல இயக்குனர் தங்கர்பச்சான் வெளியிட்ட பாராட்டு கடிதம்!

Photo of author

By Hasini

ருத்ர தாண்டவம் படம் குறித்து பிரபல இயக்குனர் தங்கர்பச்சான் வெளியிட்ட பாராட்டு கடிதம்!

இயக்குனர் மோகன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த இரண்டாவது படம் ருத்ரதாண்டவம். இந்த படம் வெளிவருவதற்கு முன்பே பிரம்மாண்ட வெற்றி அடைந்தது. மேலும் இயக்குனர் சமுதாயத்தில் மக்களுக்கு ஏற்படும், பலர் கண்கூடாக பார்க்கும் விசயங்களை தைரியமாக முன்வைக்கிறார். இவர் முதல் படத்திலும் சமூக கருத்துள்ள படத்தை, வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

அந்தப் படத்திற்கும் சிலர் எதிர்மறை எண்ணங்களை வெளிப்படுத்தி வந்தனர். தற்போது இந்த படத்திற்கும் பல்வேறு எதிர்மறை கருத்துக்கள் வெளிவந்தாலும் ,அவர் துணிந்து இந்த படத்தை வெளியிட்டுள்ளார். இது குறித்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டாலும், சமுதாயத்தில் தற்போது நடக்கும் பல விஷயங்களை அவர் கையாளும் விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேபோல் வெளியாவதற்கு முன்பே வசூல் சாதனையும் படைத்தது. இந்நிலையில் ருத்ர தாண்டவம் பட இயக்குனர் மோகனுக்கு நடிகர் மற்றும் இயக்குனரான  தங்கர்பச்சான் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். பாரதிராஜாவிற்கு அடுத்தபடியாக கிராமங்களை வைத்து படம் எடுப்பதில் தங்கர்பச்சான் சிறந்த ஒரு இயக்குனராக இருப்பவர்.

இவர் சில படங்களில் நடிகராகவும் தன் முகத்தை காட்டினார். அழகி, ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற படங்களை இயக்கியுள்ளார். சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பள்ளிக்கூடம், அம்மாவின் கைபேசி போன்ற படங்களில் நடிக்கவும் செய்தார். இவர் பல விருதுகளையும் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ருத்ர தாண்டவம் இயக்குனருக்கு ஒரு பாராட்டு கடிதம் எழுதி உள்ளார்.

அவர் எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இந்த படத்தை ஒவ்வொரு மனிதனும் கண்டிப்பாக காண வேண்டும். அது அவர்களது கடமை என்றே நான் உணர்கிறேன். மக்கள் நாள்தோறும் சந்திக்கின்ற, காண முடிகின்ற இன்றைய சிக்கல்களை தான் காட்சிகளாக கருத்துக்களாக நீங்கள் முன்வைத்திருக்கிறார்கள். அதற்கே தனி மரியாதை உங்களிடம் ஏற்படுகிறது.

மக்களின் பலவீனத்தை பணமாக்க பொழுது போக்கு எனும் போதைப் பொருளை திரைப்படங்களாக பலர் உருவாக்கி இந்த சமூகத்தை பின்னோக்கி அழைத்துச் செல்கின்றனர். அவர்களுக்கு இடையில் விழிப்புணர்வை தூண்டும் உங்களின் ருத்ர தாண்டவத்தை மக்கள் தற்போது கொண்டாடி தீர்ப்பார்கள் என்றும், தற்போதைய சூழ்நிலையில் கிடைத்த வசதி வாய்ப்புகளை கொண்டு எவரும் பேசத் துணியாதவைகளை ஊடகத்தின் மூலமாக, பல கோடி மக்களின் இதயங்களுக்கு கடத்தி இருக்கும் உங்களுக்கும், திரைப்படக் குழுவினருக்கும் மக்களில் ஒருவனாக எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் இயக்குனரை பாராட்டி கடிதம் எழுதியுள்ளார்.