கடந்த 2020 ஆண்டில் இருந்து டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஃபார்மில் இல்லை. இவர் சொந்த மண்ணிலேயே திணறிக்கொண்டு சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அடுத்து வரும் ஆஸ்திரேலியா போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டும். இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அறிவுறுத்தல்.
இந்திய அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணியுடனான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்தது இந்திய அணி. இந்நிலையில் 3வது போட்டி நவம்பர் 1 ம் தேதி நடக்க உள்ளது.
இந்த தொடரின் இறுதிப் போட்டியில் ஆறுதல் வெற்றியாவது இந்திய அணி பெரும என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். இந்த போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற முக்கியமான போட்டியாக கருதபட்டது. இந்நிலையில் இந்த தொடரை இழந்துள்ளது இந்திய அணி. இதற்கு காரணம் சீனியர் பேட்ஸ்மேன்கள் தான் என்று விமர்சனம் வெளியாகி வருகிறது.
சுப்மன் கில்,யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். ஆனால் சீனியர் பிளேயர்கள் பேட்டிங்கில் சொதப்பி வருகின்றன. 4 ஆண்டுகளாக சொந்த மண்ணில் சொதப்பி இருக்கிறார். ரோஹித் சர்மா இனி நடக்க இருக்கும் டெஸ்ட் போட்டிகளில் எப்படி செயல் படுவார் என்ற சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.