100வது பிறந்தநாளை கொண்டாடும் கேரளா முன்னாள் முதல்வர்!!! வாழ்த்துக்கள் தெரிவிக்கும் தலைவர்கள்!!!

Photo of author

By Sakthi

100வது பிறந்தநாளை கொண்டாடும் கேரளா முன்னாள் முதல்வர்!!! வாழ்த்துக்கள் தெரிவிக்கும் தலைவர்கள்!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான கே.எஸ் அச்சுதானந்தன் அவர்கள் தனது 100வது பிறந்தநாளை இன்று(அக்டோபர்20) குண்டும் நிலையில் அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

1923ம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே நாளில் அதாவது அக்டோபர் மாதம் 20ம் தேதி கேரளா மாநிலம் ஆலப்புலா மாவட்டத்தில் உள்ள புன்னபுரா கிராமத்தில் கே.எஸ் அச்சுதானந்தன் அவர்கள் பிறந்தார். இதையடுத்து கே.எஸ் அச்சுதானந்தன் அவர்கள் ஆரம்பப் புள்ளியுடன் படிப்பை நிறுத்தி ஆலப்புலா மாவட்டத்தில் இயங்கி வந்த தொழிற்சங்கத்தால் ஈர்க்கப்பட்டார்.

1964ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டத்தில் அதில் இருந்து விலகிய கே.எஸ் அச்சுதானந்தன் அவர்கள் உள்பட 32 பேரும் வெளியேறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார். இதன் நிறுவனத் தலைவர்களில் ஒருவராக கே.எஸ் அச்சுதானந்தன் அவர்கள் செயல்பட்டு வந்தார்.

இதையடுத்து 2006ம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று கே.எஸ் அச்சுதானந்தன் அவர்கள் 82வது வயதில் கேரளா மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார். இதையடுத்து கேரளா மாநிலத்தின் மிக அதிக வயதில் முதல்வரானார் என்ற சாதனையை கே.எஸ் அச்சுதானந்தன் அவர்கள் படைத்தார்.

கேரளா மாநிலத்தில் தற்பொழுது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையில் நடைபெறும் ஆட்சியில் கே.எஸ் அச்சுதானந்தன் அவர்கள் நிர்வாக சீர்திருத்தக்ஸகுழு தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும் கேரளா மாநிலத்தின் முதல்வராகவும், எதிர்கட்சித் தலைவராகவும், 7 முறை சட்டசபை உறுப்பினராகவும் கே.எஸ் அச்சுதானந்தன் அவர்கள் பதவி வகித்துள்ளார்.

வயோதிகம் காரணமாக கே.எஸ் அச்சுதானந்தன் அவர்கள் எந்தவொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில் 100வது பிறந்தநாளை கொண்டாடும் முன்னாள் முதல்வர் கே.எஸ் அச்சுதானந்தன் அவர்களுக்கு கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் அவர்களும் அரசியல் தலைவர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.