முன்னாள் எம்.எல்.ஏ, காலமானார்!! அரசியல் தலைவர்கள் இரங்கல்!!

Photo of author

By Rupa

முன்னாள் எம்.எல்.ஏ, காலமானார்!! அரசியல் தலைவர்கள் இரங்கல்!!

Rupa

Former MLA passed away!! Condolences to political leaders!!

வேடசந்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ,  தண்டபாணி உடல்நலக்குறைவால் காலமானார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் 2006-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு  வெற்றி பெற்றவர் எம் .தண்டபாணி (75).

இவர், காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியில் தனது அரசியல்  பயணத்தை தொடங்கினார். 1996-ம் ஆண்டு ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தலைவராக பதவி வகித்தார். 1998 ஆண்டு முதல் 2013 வரை திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தார். 2006 முதல் 2011 வரை வேடசந்தூர் எம்.எல்.ஏ, வாக சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். பிறகு காங்கிரஸ் கட்சிக்கு பணியாற்றி வந்தார்.

பின் ஜி கே வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸில் இணைந்தார்.  இவர் கடந்த சில  மாதங்களாக உடல்நிலை குறைவால் வீட்டிலேயே மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.  இந்த நிலையில் எம் .தண்டபாணி நேற்று மாலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்த செய்தி அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.