மாவட்ட ஆட்சியரை மிரட்டிய முன்னாள் எம்.எல்.ஏ க்கள்!
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், அதிமுக வெற்றியடையாமல், திமுக வெற்றி அடைந்து விட்டது. அதன் காரணமாக பல அதிரடி முடிவுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். அதின் மூலம் பாதிப்படையும் முன்னாள் எம்எல்ஏக்கள் சிலர் முதல்வர் மீது பல்வேறு புகார்களை கூறி வருகின்றனர். முதல்வர் தற்போது செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும், குறை கூறி வருகின்றவர். மேலும் தேர்தல் சமயத்தில் திமுக சொன்ன தேர்தல் கொள்கைகளை நிறைவேற்றவில்லை என்றும், அவற்றை குறித்தும் அதிமுக தமிழகம் முழுவதிலும் ஆர்ப்பாட்டங்களும் செய்து வருகின்றன.
இப்படி போரட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றி அடைந்தது. அதனைத் தொடர்ந்து அந்த மாவட்டத்தில் எம்.எல்.ஏ கள் கொரோனா தடுப்பூசி மையங்களை அதிகரிக்கவும், மத்திய, மாநில அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்களை ரத்து செய்யக்கூடாது எனவும், அந்தப் பகுதிகளில் நடைபெறும் அரசு பணி தொடக்க நிகழ்ச்சிகளில் எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும், பல கோரிக்கைகளை முன்வைத்தும், வலியுறுத்தியும், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் எஸ். பி. வேலுமணி தலைமையில் பல எம்எல்ஏக்கள் சேர்ந்து கோவை மாவட்ட கலெக்டர் சமீரனிடம் மனு ஒன்றை கொடுத்தனர்.
அப்போது மாவட்ட கலெக்டர் உட்கார்ந்தபடியே அந்த மனுவை வாங்கியுள்ளார். இதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். முக்கியமாக பொள்ளாச்சி தொகுதி எம்எல்ஏ ஜெயராமன் மற்றும் மேட்டுப்பாளையம் தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் ஆகியோர் இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை அமைதியாக இருக்கும்படி எம்எல்ஏ எஸ்.பி. வேலுமணி மற்றும் கிணத்துக்கடவு எம்எல்ஏ தாமோதரன் கூறினார்கள்.
ஆனாலும் அவர்கள் இருவரும் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் என்ன இப்படி பண்றீங்க? இது ரொம்ப தவறு சார்? என்ன பழக்கம் இது? உங்களுக்கு இதெல்லாம் யாரும் சொல்லி கொடுக்கவில்லையா? நாங்களெல்லாம் 25 வருடமாக மக்கள் பிரதிநிதியாக இருக்கிறோம். இந்த பழக்கம் எல்லாம் ரொம்ப தவறு என்று ஜெயராமனும், அதேபோல இது என்னங்க புது வழக்கம் என்று செல்வராஜும் கேட்டு உள்ளனர்.