Uncategorized

திமுக முன்னாள் எம்.பி. டாக்டர் கலாநிதி மறைவு!

மத்திய சென்னை தொகுதி திமுக முன்னாள் எம்.பி. டாக்டர் கலாநிதி (வயது 81) மாரடைப்பால் சென்னையில் நேற்று காலமானார்.

திமுக சார்பில் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் 1980, 1984 ஆம் ஆண்டு போட்டியிட்டு 2 முறை வெற்றி பெற்றவர் டாக்டர் கலாநிதி. சிறந்த நாடாளுமன்ற பேச்சாளராக விளங்கினார். திமுகவில் இருந்து விலகி மதிமுகவில் இணைந்த அவர், பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கி, மருத்துவப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். சென்னை அண்ணா நகரில் கே.எச்.எம். என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வந்தார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் கலாநிதியின் மனைவி ஹேமமாலினி காலமானார். இந்நிலையில், நேற்று அதிகாலை 5 மணி அளவில் மாரடைப்பால் கலாநிதி காலமானார். அவருக்கு 3 மகள்கள் உள்ளனர். அவரது உடல் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ என பலரும் இவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment