முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்!!

0
126

முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் (வயது 82) காலமானார்.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில் வெளியுறவு துறை, நிதி துறை, பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல துறைகளில் ஜஸ்வந்த் சிங் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது‌. பாஜகவை வலுப்படுத்தியவர்களில் மிக முக்கியமான ஒருவராக இருந்த ஜஸ்வந்த் சிங் 2001ம் ஆண்டு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருதினைப் பெற்றார்.

இவருக்கு கடந்த சில நாட்களாக ஏற்பட்ட உடல்நலக்குறைவின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் இன்று காலை உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Previous articleமுக்கிய பதிவு! பள்ளி மாணவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்!!
Next articleஇன்று முதல் அக்டோபர் 1 வரை இதற்கு தடை:! மீறினால் கடும் நடவடிக்கை!