தூத்துக்குடியில் மழைக்கு வீடு இடிந்து விழுந்ததில் 6 மாத குழந்தை உட்பட 4 பேர் அதிர்ஷ்டவசமாக பத்திரமாக மீட்பு!

Photo of author

By Savitha

தூத்துக்குடியில் மழைக்கு வீடு இடிந்து விழுந்ததில் 6 மாத குழந்தை உட்பட 4 பேர் அதிர்ஷ்டவசமாக பத்திரமாக மீட்பு!

தூத்துக்குடியில் மழை காரணமாக வீடு இடிந்து விழுந்தது இதில் அதிஷ்டவசமாக 6 -மாத குழந்தை உட்பட 4-பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தூத்துக்குடியில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், நேற்று மாலை 4 -மணி முதல் நள்ளிரவு வரை தொடர் சாரல் மழை பெய்தது. இதனால் தூத்துக்குடியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை தூத்துக்குடி தெற்கு காட்டன் ரோட்டில் குனசீலன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் அண்டோ மகன் ஆக்னஸ் (25), அவரது மனைவி திவ்யா (23) அவர்களது 6- மாத பெண் கைக்குழந்தை மற்றும் தாயார் அந்தோணியம்மாள் (40), அவரது ஆகிய 4 -பேர்கள் வசித்து வந்தனர்.

இவர்கள் அனைவரும் வீட்டின் நடுரூமில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டின் வெளிபுற அறை திடீரென இடிந்து விழுந்தது இதில் அதிர்ஷ்டவசமாக 6-மாத குழந்தை உட்பட 4-பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் இந்த சம்பவம் தொடர்பாக தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.