நான்கு அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட்! மாஸ் காட்டிய அமைச்சர்!!

0
182

நான்கு அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட்! மாஸ் காட்டிய அமைச்சர்!!

அரசு பொது மருத்துவமனையில் பணி நேரத்தில் இல்லாத நான்கு மருத்துவர்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்தார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள்!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் இன்று திடீரென,மா சுப்பிரமணியம் அவர்கள் ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்ததோடு அங்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளையும் கேட்டறிந்தார்.மேலும் அறுவை சிகிச்சை பிரிவு,சித்தா பிரிவு,பிரசவத்திற்கு பிந்தைய பிரிவு மற்றும் ஆய்வகம் என பல இடங்களிலும் ஆய்வு செய்தார்.

அரசு மருத்துவமனையில் மொத்தம் 16 மருத்துவர்கள் இருக்க வேண்டிய நிலையில் மதுராந்தகம் மருத்துவமனையில் 12 மருத்துவர்கள் மட்டுமே இருந்துள்ளனர்.அமைச்சரின் இந்த ஆய்வின்போது பணி நேரத்தில் நான்கு மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வராதது தெரியவந்தது.

இதனையடுத்து பணி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத நான்கு மருத்துவர்களையும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யஅமைச்சர் உத்தரவிட்டார்.மேலும் மருத்துவமனையின் செயல்முறைகளை முறையாக கவனிக்காத மாவட்ட மருத்துவ இணை இயக்குநரை பணியிடமாற்றம் செய்தும் அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

Previous articleDec 19 தமிழகத்திற்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை! உருவாகியது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!!
Next articleதம்பதியினருக்கு அரசு வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! குழந்தை பெற்றால் ரூ 3 லட்சம் மானியமாக வழங்கப்படும்!