கொய்யா இலை நாலு போதும்.. ஸ்கால்ப்பில் ஒட்டிக்கிடந்த பொடுகு ஏடு ஏடாக வந்துவிடும்!!

Photo of author

By Divya

உங்கள் தலையில் பொடுகு பாதிப்பு அதிகமாக இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை செய்து பாதிப்பில் இருந்து மீளுங்கள்.

தலையில் பொடுகு வரக் காரணங்கள்:

*உரிய பராமரிப்பின்மை
*பருவநிலை மாற்றம்
*தலையில் அதிகளவு வியர்த்தல்
*மன அழுத்தம்

பொடுகு தொல்லையால் ஏற்படும் பாதிப்புகள்:

*தலை அரிப்பு
*தலை முடியில் துர்நாற்றம்
*முடி உதிர்வு
*தலையில் புண்கள் உருவாதல்
*ஸ்கால்ப்பில் எரிச்சல் உணர்வு

தேவையான பொருட்கள்:-

1)கொய்யா இலை – பத்து
2)துளசி இலைகள் – இரண்டு ஸ்பூன்
3)கடலை மாவு – இரண்டு தேக்கரண்டி

பயன்படுத்தும் முறை:-

செய்முறை விளக்கம் 01:

முதலில் கொய்யா இலை மற்றும் துளசி இலைகளை தண்ணீர் போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

செய்முறை 02:

அடுத்து இந்த இரண்டு இலைகளையும் மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை 03:

இந்த இலை பேஸ்டை கிண்ணத்தில் போட்டு தேவையான அளவு கடலை மாவு சேர்த்து கலந்து தலைமுடியின் மயிர்க்கால் பகுதியில் தடவி ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

செய்முறை 04:

பின்னர் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.இதை தொடர்ந்து செய்து வந்தால் பொடுகு பிரச்சனை நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
2)வேப்பிலை – ஒரு கைப்பிடி
3)கற்றாழை துண்டு – இரண்டு
4)பாசிப்பயறு – ஒரு தேக்கரண்டி

பயன்படுத்தும் முறை:-

செய்முறை 01:

கிண்ணம் ஒன்றில் வெந்தயம் மற்றும் பாசிப்பருப்பு போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

செய்முறை 02:

பிறகு கற்றாழை மடல் துண்டுகள் இரண்டு எடுத்து தண்ணீரில் போட்டு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

செய்முறை 03:

அடுத்து ஒரு கைப்பிடி வேப்பிலையை பாத்திரத்தில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.இப்பொழுது வேப்பிலை,ஊறவைத்த வெந்தயம்,பாசிப்பயறு மற்றும் கற்றாழை துண்டுகளை போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை 04:

பிறகு இந்த பேஸ்டை தலை முழுவதும் அப்ளை செய்து ஒன்று முதல் இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

செய்முறை 05:

அதன் பிறகு வெது வெதுப்பான தண்ணீர் கொண்டு தலையை அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.இந்த ஹேர் பேக் தலையில் உள்ள பொடுகை போக்க உதவுகிறது.